பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேலாளர் கைது
சென்னை: தி.நகரில் செயல்படும் தனியார் நகை விற்பனை நிறுவனத்தில், பணியாற்றி வந்த பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மண்டல மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 39 வயது பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரியில் வசித்து வருகிறார்.
இவர், தங்க நகைகள் வாங்கி விற்கும் தனியார் நிறுவனமான அட்டிகா கோல்டு நிறுவனத்தின், செங்கல்பட்டு கிளையில் கடந்த 2ம் தேதி பணியில் சேர்ந்தார்.
கடந்த 17ம் தேதி, நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தி.நகருக்கு அவர் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு, மண்டல மேலாளர் கார்த்திக் ஸ்ரீராமச்சந்திரன், 45 என்பவர், 'செங்கல்பட்டு கிளைக்கு ஏன் தினமும் தாமதமாக வருகிறீர்கள்' என பணியாளர்கள் முன்னிலையில் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த பெண்ணின் தோளில் கையை வைத்து, சேலையை பிடித்து அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட தாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக் ஸ்ரீராமச்சந்திரனை பாண்டி பஜார் போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
எங்களை பார்த்து திமுக பயப்பட தேவையில்லை: நயினார் நாகேந்திரன்
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் மகள் திருமணத்திற்கு வந்த மறைந்த தந்தை
-
உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சிக்கிமில் பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்; பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்
-
குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை
-
மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்