ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம், வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களை விடுவிக்க கோரி நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர்.

மேலும் தங்கச்சிமடத்தில் மத்திய, மாநில அரசை வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட், காரல் மார்க்ஸ் பங்கேற்றனர்.

Advertisement