மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்
புதுடில்லி: ''மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. பெண் சக்தியின் உருவமாக திகழ்ந்ததார்'' என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயம் முதல் பல்வேறு விஷயங்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் பயனுள்ளதாக அமைகிறது. சமீபத்திய ஏ.ஐ., மாநாட்டில் நமது நாட்டின் முன்னேற்றத்தை பார்க்க முடிந்தது. இதனை நான் பாராட்டுகிறேன். டிஜிட்டல் முறைகேட்டை தடுக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்வேர்டு, ஆதார் ஒடிபி, வங்கி விவரம் உள்ளிட்டவற்றை யாரிடமும் நீங்கள் பகிர்ந்து கொள்ள கூடாது.
மகத்தான தலைவர்
மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. இவர் பெண் சக்தியின் உருவமாக திகழ்ந்தார். இவரது தேசபக்தி மிகவும் போற்றத்தக்கது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடுமையாக பாடுபட்டார். ஜெயலலிதா பல பெண்களின் மனதை கவர்ந்தவராக இருந்தார். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. நான் குஜராத் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் அவர் நேரில் வந்து கலந்து கொண்டார்.
மக்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களின் மனதில் என்றென்றும் இருப்பார்கள் என்பதற்கு ஜெயலலிதா உதாரணம். ஜெயலலிதாவின் சிந்தனை மிகவும் தெளிவானது. இப்போதும் கூட, நான் தமிழகம் செல்லும்போது, ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டவுடன் மக்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியானது, என்னை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. பிப்.,24ம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பணியை நினைவு கூர்ந்து போற்றுகிறேன்.
அஞ்சலி
கேரளாவை சேர்ந்த 10 மாத வயதுடைய அலின் ஷெ ரீன் ஆப்ரகாம் என்ற குழந்தைக்கு இந்த பாரத தேசமே அஞ்சலி செலுத்துகிறது. தங்கள் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த அருண் ஆப்ரஹாரம், ஷெரீன் ஆன் ஜான் தம்பதியின் முடிவை வருங்கால தலைமுறைகள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
2014, 15 களில் இவிங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் திட்டுனது எல்லாம் காதில் தேன் போல பாய்கிறது. மோடியா லேடியாங்கறது போயி, லேடி கிரேட் லேடி ஆயிருச்சு.
ஏல சாமி திமுக தேதிமுக சேர்ந்த மாதிரியா
சென்னை சென்ட்ரல் ஐ எம்ஜியார் என பெயர் மாற்றிய உத்தமர் இவர். உச்ச கோர்ட் ஆல் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை இவர் பேசுவதில் வியப்பில்லை . தமிழகத்தில் ஊழலை அடியோடு ஒழித்த விஸ்வகுரு. இவர் ஊழலை ஒழித்ததனால் மந்த்ரிகள் எல்லோரும் இப்போது சோத்துக்கு தின்றாடுகிறார்கள். இவர் பேசுவது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .
வழக்கை இருபது வருடம் இழுத்தடித்து ஜெயிலுக்கு போன ஊழல் ராணி என்பதை சொல்ல வில்லையே
ஊழலுக்காக சிறை சென்றால் மகத்தான தலைவரா?
அந்த மக்கள் போற்றும் மகத்தான தலைவர் 70 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரை போய் பார்த்து நலம் விசாரிக்க மனம் இல்லையா அல்லது நேரம் இல்லையா ஜிக்கு
காலி பண்ணதே நீங்க தானே மோடி ஜி...
ஏல பிரேம்...பார்து போடு..லாடம் கட்ட போறாங்க
லேடியா? மோடியா? என உங்களுக்கு சவால்விட்டு தனியாளாக வெற்றிபெற்றவர், ஜெ டெல்லி வருகிறார் என்றால் டெல்லியே நடுங்கும், உங்க கட்சி ஆரம்பித்த அத்வானியே வந்தாலும்சரி , பிரதமர் வந்தாலும்சரி போயஸ்கார்டன் கதவுகள் அவ்வளவு எழிதில் திறக்காது
இப்போது மட்டும் அல்ல, இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று கூறியதும் இதே மகத்தான தலைவர் தானுங்கோ
அந்த லேடி மக்கள் போற்றும் மாபெரும் பெண்மனிதானுங்கோ ..
என்னடா இது எலி அங்கிட்டு இங்கிட்டு ஓடுது
என்ன இது
1999-2004 இல் பெருச்சாளி ஓடியதே? வாஜ்பாயிடம்.