மோடி நெருங்கிய நண்பர்; இஸ்ரேல் பயணத்தை பாராட்டிய பிரதமர் நெதன்யாகு

6

ஜெருசலேம்: "பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். இந்தியா-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.


இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பிப்ரவரி 25ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய அம்சங்கள் குறித்து இருவரும் விரிவாக கலந்து பேச உள்ளனர். இந்தியா, இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது இந்த பயணத்தின் முக்கிய இலக்காகும்.


2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து இஸ்ரேலுக்கு பயணிப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். இந்தியா-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது. நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசுகிறோம், ஒருவரையொருவர் சந்திக்கிறோம்," என்று நெதன்யாகு கூறினார்.

Advertisement