பச்சை வண்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
காஞ்சிபுரம்: பள்ளூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பச்சைவண்ண பெருமாள் மற்றும் சீதா, லக் ஷ்மண, ஹனுமத் சமேத பட்டாபிஷேக ராமச்சந்திர சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில், திருகுகேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத பட்டாபிஷேக ராமச்சந்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல்வேறு கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 20ம் தேதி யாகசாலை பிரவேசம், வாஸ்து ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை, 9:30 மணிக்கு கலச புறப்பாடு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம், இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எங்களை பார்த்து திமுக பயப்பட தேவையில்லை: நயினார் நாகேந்திரன்
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் மகள் திருமணத்திற்கு வந்த மறைந்த தந்தை
-
உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சிக்கிமில் பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்; பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்
-
குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை
-
மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்
Advertisement
Advertisement