அதிமுக ஒன்றுபட யாரும் முயலவில்லை: திருமாவளவன்
திருவள்ளூர்: ' 'ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்க யாரும் முன்வரவில்லை,'' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: மதத்தின் பெயராலும் தீண்டாமை கடைபிடிக்கிற பா.ஜ.,வை தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் அவர்களை தேர்தல் களத்தில் வீழ்த்த வேண்டும்.ஜெயலலிதாவுக்கு பின், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களுடைய கருத்தாக இருந்தது. ஆனால், ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்க யாரும் முன்வரவில்லை.
தே.மு.தி.க.,வும், இப்போது தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளது. அது மகிழ்ச்சி. அக்கட்சிக்கு எவ்வளவு சீட் கொடுப்பர் என்பது தெரியாது. ஆனால், அவரவர் சக்திக்கேற்ப தேவையான தொகுதிகளை, தி.மு.க., தலைமை வழங்கும். ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்கக்கூடாது என எந்த இக்கட்டையும், கூட்டணி தலைமைக்கு நாங்கள் தரவில்லை. கூட்டணிக்கு அக்கட்சி தேவையென்றால், தி.மு.க., தான் அந்த முடிவையும் எடுக்கும்.
இருந்தபோதும், 2011க்குப் பின், பா.ம.க.,வும் பா.ஜ.,வும் சமூக ரீதியில் வெறுப்பு அரசியலை முன்னெடுத்ததாலேயே, அக்கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என முடிவெடுத்தோம். த.வெ.க., தலைவர் விஜய் அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவார் என்பது வெறும் யூகம் மட்டுமே. அவரால் ஆட்சி மாற்றமெல்லாம் ஏற்படுத்த முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
பா மா கா உள்ளே வந்துவிடும்...நாலு சீட்டு லட்சியம், சாதி கட்சி தலைவர், சென்னை உயர் நீதிமன்றம் முன்பு கொலை வெறி தாக்குதல் நடத்தி காட்டியவர்
அல்லக்கை கட்சிகளுடன் கூட்டணி பேசும் நேரத்தில் நீ கொஞ்சம் ஓவராய் கூவுரே, அதிக சீட்டு கிடையாது
கோபாலபுரத்தில் அடைப்பு எடுக்கும் உனக்கு என்ன மேன் கவலை அதைப்பற்றி?
நேபோட்டிசம் ஒழிக என்று சொல்லும் ஆண்மை வேண்டும் திருமா
தனியே நிற்க தைரியம் இல்லாதவரெல்லாம்....பேசக் கூடாது
உங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் விடியலை ஒன்றிணைக்க உதவ சொல்ல வேண்டியது தானே..
உங்களுக்கு என்ன அதிமுக மேல் அக்கறை, முதலில் இரட்டை இலக்க தொகுதி, பொது தொகுதி கேட்க முடியுமா திருமா சார்
இந்த தி.மு.க மைண்ட் செட்டை விட்டு முதல்ல வெளிய வாங்க. உங்களுக்கு பாஸ் ஆக விருப்பம் இல்லேன்னாலும் உங்களை சார்ந்தவர்களுக்கு அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுங்க.
திருமா அண்ணே அ.தி.மு.க வைப் பற்றி ரொம்ப அக்கறைன்னே உங்களுக்கு! அப்படியே சும்மா உடம்பெல்லாம் புல்லரிக்குது! அப்படி அ.தி.மு.க மேல ரொம்ப அக்கறையா இருந்தா நீங்க ஒண்ணு செய்யுங்கண்ணே? பேசாம நீங்க எடப்பாடியார் முன்னிலையில் அ.தி.மு.க விலே சேர்ந்திருங்க! அப்புடி அ.தி.மு.கவுக்கு வந்து ரைட்,ராயலா உங்க கருத்த சொன்னீங்கன்னா நீங்க சொல்ற நல்ல கருத்துக்களை அ.தி.மு.க தொண்டர்களும் ஏத்துக்குவாங்க! எடப்பாடியாரும் ஏத்துக்குவார்!
திருவோடு கையில் இருக்கிறது கூட்டணியோ பயிர் இருக்கிறது பின் எதற்கு அடுத்தவன் வீட்டு பொருள் ஓவிய