எஸ்ஐஆர் பணி எதிரொலி; 9 மாநிலங்களில் 1.70 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

1

புதுடில்லி: ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம், 1.70 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.


தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில், உயிரிழந்தோர், நிரந்தரமாக புலம்பெயர்ந்தோர், இரு வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தோர் ஆகியோரை கண்டறிந்து, அவர்களது பெயர்களை நீக்குவதற்காக எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன் முன்னெடுத்தது.


கடந்த ஆண்டு அக்., 27ல் குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், அந்தமான் - நிக்கோபார் தீவுகள், கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளும் போது, 21.45 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.


சமீபத்தில், இந்த பணிகள் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், 1.70 கோடி பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தமாக 19.75 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பீஹாரில் இப்பணி முடிந்த நிலையில், அடுத்ததாக, 60 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., நடந்து வருகிறது.

Advertisement