தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க., துவக்கியது!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, கூட்டணி கட்சிகள் உடனான பேச்சு வார்த்தையை தி.மு.க., நேற்று துவக்கியது. முதற்கட்டமாக, முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேச்சு நடத்த வருமாறு, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் அடுத்தடுத்து தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, தி.மு.க.,வில் அமைக்கப்பட்ட குழு, முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை நேற்று அழைத்தது.
ஐந்து தொகுதிகள்
சென்னை அறிவாலயத்தில் நடந்த பேச்சில், தி.மு.க., குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, சிவா, ஆ.ராஜா மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
முஸ்லிம் லீக் சார்பில், அதன் தேசிய தலைவர் காதர் மொய்தீன், நவாஸ் கனி, அபுபக்கர், ஷாஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இரு தரப்பினரும் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
கடந்த முறை, தி.மு.க., அணியில் மூன்று தொகுதிகள் பெற்று போட்டியிட்ட முஸ்லிம் லீக், இம்முறை ஐந்து தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது. ஆனால், கடந்த முறை ஒதுக்கப்பட்ட மூன்றிலும் அக்கட்சி தோல்வி அடைந்ததால், மூன்று கூட தர முடியாது என தி.மு.க., குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். அனேகமாக அக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், முஸ்லிம் லீக்கை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, ம.தி.மு.க., மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன், தி.மு.க., குழுவினர் இன்று பேச்சு நடத்த உள்ளனர்.
இந்திய கம்யூ.,
வரும் 26ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 27ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சு நடைபெற உள்ளது. அக்கட்சிகளை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க.,வுடன் பேச்சு நடத்தப்படும்.
நேற்று நடந்த இரு தரப்பு பேச்சுக்கு, முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியதாவது: தொகுதி பங்கீடு குறித்து பேச, ஐந்து பேர் குழு அமைத்தோம். தமிழகத்தில் கருணாநிதி காலத்தில், முஸ்லிம் சமுதாயத்திற்கு 16 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என சொல்லி வந்தோம்.
கருணாநிதி ஐந்து தொகுதிகளை கொடுத்தார். அதே மாதிரி, ஐந்து தொகுதிகளை ஸ்டாலின் தர வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக தான், நாங்கள் ஐந்து பேர் குழுவை அமைத்து, ஐந்து தொகுதிகளை தருமாறு கேட்டோம்.
புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள காரணத்தால், தி.மு.க., கூட தன் தொகுதிகளை விட்டுக் கொடுக்க உள்ளதாக, அக்கட்சி குழு கூறியது. இதையடுத்து, ஐந்து தொகுதிகள் இல்லையென்றால், நான்கு தொகுதிகளாவது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றோம்.
அதற்கு, 'கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகள் கொடுத்தோம். அதில், ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டும்' என்றனர். நாங்கள் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து விட்டு சொல்கிறோம் என வந்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., தரப்பினர் கூறுகையில், '2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், வாணியம்பாடி, கடையநல்லுார், சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகளில், முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட்டது. ஆனால், மூன்றிலும் தோல்வி அடைந்தது. எனவே, இம்முறை இரண்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்க, தலைமை முடிவெடுத்துள்ளது' என்றனர்.
@block_P@
சென்னை அறிவாலயத்தில் காதர் மொகிதீன் பேட்டி அளித்த போது, திடீரென மயங்கினார். அருகில் நிர்வாகிகள் தாங்கி பிடித்து, அவரை அறிவாலயத்திற்குள் அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரம்ஜான் மாதத்தை ஒட்டி, முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். காதர் மொகிதீனும் நோன்பு இருப்பதாலும், வெயில் காரணமாகவும் அவர் மயக்கம் அடைந்ததாக கூறப்பட்டது.block_P
பெட்டி மூலம் இயங்கும் தேர்தல் உறவு மகா மட்டமானது.
காதர் மொஹிடீன் என்பவரும் இவரும் ஒரே நபரா? சமீபத்தில் அவர் மீது சட்டத்துக்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்தது வெளிநாடுகளிடமிருந்து இல்லீகல் முறையில் பணம் பெற்றது தொடர்பாக ஒரு வருட சிறை தண்டனை பெற்றாரா அவரா இவர்? எதுக்கு கேட்கின்றேன் என்றால் இரண்டு தொகுதிகள் கொடுத்தால், இவரும் சிறைக்கு போய்விட்டால் யார் இன்னோர் தொகுதியில் போட்டியிடுவரக்ள் என்று சந்தேகத்தினால் திமுக ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ள கேட்டிருக்குமோ என்று சந்தேகத்தில் கேட்கின்றேன்மேலும்
-
பச்சை வண்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
-
இன்று இனிதாக
-
சின்னாளபட்டியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
-
2 வயது குழந்தையை கடத்திய சென்னை தம்பதி சுற்றிவளைப்பு
-
'சீட்' தராவிட்டாலும் தேர்தல் பணி செய்வேன்
-
கடன் வாங்க கூட்டுறவு சங்கங்களை நோக்கி படையெடுப்பு தேர்தல் நெருங்குவதால் ஆர்வம்