ஆப்ரிக்காவிலிருந்து மேலும் வரும் 8 சிவிங்கிபுலிகள்: 46 ஆக உயரும் சிவிங்கிபுலிகள் எண்ணிக்கை
ஷியோபூர்: ஆப்ரிக்கா நாடான போட்ஸ்வானாவிலிருந்து மேலும் 8 சிவிங்கிபுலிகள், பிப்ரவரி 28 அன்று மத்திய பிரதேசத்தின் குனோ தேசியபூங்காவிற்கு வரவுள்ளன. இதன் மூலம் ஒட்டு மொத்த சிவிங்கிபுலிகளின் எண்ணிக்கை 46 ஆக உயருகிறது.
போட்ஸ்வானாவிலிருந்து 8 சிவிங்கிபுலிகள் பிப்ரவரி 28 அன்று மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிற்கு வரவுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த சிவிங்கிபுலிகளின் எண்ணிக்கை 46 ஆக உயரும்.
இது குறித்து மத்திய பிரதேச முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) சுபரஞ்சன் சென் கூறியதாவது:
ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவிலிருந்து 6 பெண், 2 ஆண் சிவிங்கிபுலிகள் உள்பட 8 சிவிங்கிபுலிகள், இந்திய விமானப்படை விமானம் மூலம் குவாலியர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஹெ லிகாப்டனர் மூலம் குனோவிற்கு கொண்டு செல்லப்படும். அந்த சிவிங்கிபுலிகள் வந்திறங்கியதும், இவை ஒரு மாதம் வரை பிரத்யேகக் கூடாரங்களில் கண்காணிக்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் சிவிங்கிபுலிகளின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. சமீபத்தில் ஆஷா, காமினி ஆகியவை குட்டிகளை ஈன்றதால் இந்த எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில் அடுத்து மேலும் 8 சிவிங்கிபுலிகள் வரவுள்ளது.
இவ்வாறு சுபரஞ்சன் சென் கூறினார்.
ஏற்கனவே சிறுத்தைகள் இருக்கையில் எதற்கு சிவிங்கி புலிகளை கொண்டுவருகிறோம் ? காரணம் தெரியாமல் கேட்கிறேன் விளக்கமுடியுமா ?
தமிழகத்திற்கு எத்தனை புலிகள் கிடைக்கும்?
இதில் ஒன்றிய அரசு அரசியல் செய்யக்கூடாது, தமிழகத்தை வஞ்சிக்கக்கூடாது.
தமிழன் தலை குனிய மாட்டான்.
தமிழகம் வெல்லும்.
நாட்டுக்கு ரொம்ப தேவையோ?
இந்த பூமி ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தம். நாடு என்பது மனிதனுக்குத்தான் மற்றவைகளுக்கு இல்லையே.
நீ கூடத்தான் தேவையில்லை
கொத்தடிமைக்கு ஓசியில் தேவையோ
உன்னைப் போன்ற ஆட்கள் நாட்டுக்கு தேவையில்லை.