கேரளாவின் புதுப்பெயர் ' கேரளம்': மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

15

புதுடில்லி: கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ' கேரளம்' என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநிலசட்டசபையில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் முதல்வர் பினராயி விஜயன் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. பிறகு மீண்டும் கடந்த 2024 ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை ' கேரளம்' என மாற்ற வலியுறுத்தி 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றபப்ட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.


இந்நிலையில், சேவா தீர்த் வளாகத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கேரளாவின் பெயரை ' கேரளம்' என பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement