ஐகோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய தாமதம்
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அமைச்சர் நேரு மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
தி.மு.க., மூத்த நிர்வாகியான நேரு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக உள்ளார். அவரது துறையில், 'டெண்டர்' முறைகேடு மற்றும் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகரமைப்பு அலுவலர் என, 2,538 பேரை பணி நியமனம் செய்தில், 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து உள்ளதாக, அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
ஊழலின் சூத்திரதாரிகளாக நேருவின் தம்பிகள், உதவியாளர் செயல்பட்டுள்ளனர். டெண்டர் எடுத்து தரும் புரோக்கர்களாக, சென்னை சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மாநகர போலீசில், கிழக்கு மண்டலத்தில் பணிபுரியும் இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் செயல்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய, 258 பக்க ஆதாரங்களுடன், தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, கடந்தாண்டு அக்டோபரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மூன்று கடிதங்களை அனுப்பினர். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் காலம் தாழ்த்தி வந்தனர்.
அ.தி.மு.க., நிர்வாகி இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக வழக்கு பதிவு செய்ய, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
லஞ்ச ஒழிப்பு துறையில், முதற்கட்ட விசாரணை, அதன்பின், விரிவான விசாரணை நடத்திய பின்னரே வழக்குப் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதையே காரணமாக கூறி வழக்குப்பதிவு செய்யாமல், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தரம்தாழ்ந்த கருப்பாட்டு காக்கிகள்
என்றைக்கு யாராவது ஒருவர் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் ஒரு 6 மாதம் சிறைக்கு அனுப்பப்படுகின்றார்களோ அதுவரைக்கும் யாரும் நீதிமன்ற உத்திரவுகளை நிறைவேற்றமாட்டார்கள் .திராவிஷம் அதுபோன்றது .
லஞ்ச ஒழிப்புத்துறை கலைத்து விட்டு அறிவாலயத்தில் போங்கடா. திமுக அடிமைக்கு ஆதரவாக அதிகாரிகள் இருந்தால் என்ன செய்வது.
சாமானிய மனிதனாக இருந்தால் உடனே நடவடிக்கை கொள்ளை அடிப்பவர்களுக்கு காலதாமதம் .
இப்பொழுது அந்த காலம் தாழ்த்தும் லஞ்சஒழிப்பு காவல் அதிகாரிகள் மீது மற்றொரு வழக்கு பதிவுசெய்யவேண்டும் நீதிமன்றத்தின் உத்தரவை உடனே நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியமைக்கு.
மிக கேவலமான அயோக்கியர்கள் தமிழக காக்கிசட்டைகள் அத்தனை பேருமே திமுகவின் களவானிகள் நீதித்துறையை அவமான படுத்துகின்ற இந்த ஆட்சியை ஏன் இன்னும் கலைக்காமல், இருக்கின்றார்கள்
உத்தரவு போட்டது ஐகோர்ட் என்றாலும் ஈ பீ எஸ்சுக்கு உத்தரவாதம் கொடுத்தது அந்த அங்கிள் பண் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தானே? எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முதல்வரின் துறையே குறுநில மன்னர் நேரு மீது நடவடிக்கை எடுக்குமென எப்படி எதிர்பார்த்தனர்? நீதிபதிகள் அவ்வளவு அப்பாவிகளா?
திருடன் மேல் கொள்ளைகாரன் எப்படி வழக்கு பதிவான்?மேலும்
-
அ.தி.மு.க., அறிவித்த ரூ.10,௦௦௦: த.மா.கா., ஆதரவு; தி.மு.க., எதிர்ப்பு
-
வாசிக்க தெரியாதவர்களும் வாசித்த 'தினமலர்'
-
தனியார் வசமாகும் 26 விமான நிலையங்கள்
-
திடக்கழிவு மேலாண்மை விதிகள் ஏப்., 1 முதல் அமல்படுத்த உத்தரவு விதியை மீறும் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
-
கடவுளின் தேசமான கேரளா இனி 'கேரளம்' மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
நவ கேரள குடிமக்கள் பதிலளிப்பு திட்டம் ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை