கோவில் சொத்துக்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சென்னை ஐகோர்ட் அறிவுரை
சென்னை : 'கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது, அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலுாரில், புகழ்பெற்ற கண்ணனுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 3.63 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், கடந்த 2021ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் வே.சபர்மதி நேரில் ஆஜராகி, ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, விளக்கம் அளித்தார்.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு, 5.5 லட்சம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவற்றை பாதுகாக்கவே, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், கோவில் நிலங்கள், சொத்துக்களை பாதுகாக்கும் பணியை, அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக மேற்கொள்ளவில்லை. உங்களின் பணிக்கு, ஏன் துரோகம் செய்கிறீர்கள்.அதிகாரிகளின் அலட்சிய போக்கால்தான், மாநிலத்தில் உள்ள கோவில்களின் நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. கோவில் சொத்துக்களை பாதுகாக்க தவறிய, அதிகாரிகளின் அலட்சிய போக்கை அனுமதிக்க முடியாது.
கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து, பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது, அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலங்களை ஆக்கிரமித்து, கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளிடம் இருந்து, அந்த இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.இன்றைய சூழலில், பெரும்பாலான இளைஞர்கள், தங்களின் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே, கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுபோன்ற நபர்களுக்கு, மூன்று நேரமும், தரமான, சுவையான உணவு வழங்க, அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கை, சிறந்த சேவையாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அறநிலையத்துறை குற்றவாளிகளுக்கு கோவில் பணத்தில் ல் நியமித்தால் யார் பயப்படுவாங்க ஊழல் குற்றம் சொந்த ல் வைத்து வாதாட சொல்லுங்க
ஐகோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய தாமதம். ஐகோர்ட் உத்தரவுக்கு செவிசாய்க்கவில்லை தமிழக லஞ்சஒழிப்பு துறையினர். இப்பொழுது இந்த அறிவுரையை மட்டும் காதில் போட்டுக்கொள்ளவா போகிறது அந்த திருட்டு திமுக ஆட்சியாளர்கள்.
அரசு கோயில்களை பாதுகாப்பது ஆட்டுமந்தையை குள்ளநரிக்கூட்டம் பாதுகாப்பது போன்றது .பொது சொத்துக்களை அபக்ரிப்பது எல்லாமே அரசியல்வியாதிகள்தான். இதற்கென்றே வியாதிகள் ஒரு ரவுடிக்கூட்டத்தை இலவசமா சாராயம் ஊத்தி வளர்த்திருப்பார்கள் .நேற்றுகூட திருச்சி வழக்கறிஞ்சர் ஒரு வீடியோ போட்டு திரராவிஷசொத்து அபகரிக்கும் வித்தையை விளக்கி இருக்கின்றார்கள் . ஆளுபவர்களுக்காகத்தான் சொத்துக்கள் அபகரிப்பு நடக்கும்போது எப்படி நடவடிக்கைபாயும்.எந்த ஒரு நீதிமன்றத்தீர்ப்பதையும் அவர்கள் மதித்தது இல்லை .அப்படி இருக்கும்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.அவர்களுக்கு பதவி உயர்வு வேண்டுமானாலும் கிடைக்கும் .யாரையாவது ஒருத்தரை நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் ஒரு 6 மாதம் சிறைக்கு அனுப்பினால் ஒழிய வேறு எதுவுமே நடக்காது .யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டர்வகள் இல்லை என்பதை ஒருமுறை நீதிமன்றம் நிரூபிக்கவேண்டும் .ஒரு முதன்மந்திரி நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் சிறைசென்ற வரலாறு இருக்கின்றது .
நீதியரசர்களே. அதிகாரிகளிடமிருந்து மேலிடத்துக்கு கிடைக்கும் கட்டிங்க்கு வேட்டு வைக்கிறீங்க. நியாயமா? ஆக்கிரமிப்பு செய்வதெல்லாம் ஆளும்கட்சி ஆட்கள்தானே?மேலும்
-
அ.தி.மு.க., அறிவித்த ரூ.10,௦௦௦: த.மா.கா., ஆதரவு; தி.மு.க., எதிர்ப்பு
-
வாசிக்க தெரியாதவர்களும் வாசித்த 'தினமலர்'
-
தனியார் வசமாகும் 26 விமான நிலையங்கள்
-
திடக்கழிவு மேலாண்மை விதிகள் ஏப்., 1 முதல் அமல்படுத்த உத்தரவு விதியை மீறும் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
-
கடவுளின் தேசமான கேரளா இனி 'கேரளம்' மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
நவ கேரள குடிமக்கள் பதிலளிப்பு திட்டம் ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை