ஈரானில் விமானப்படை ஹெலிகாப்டர் காய்கறி பழங்கள் சந்தையில் கீழே விழுந்து நொறுங்கியது; விபத்தில் 4 பேர் பலி

டெஹ்ரான்: மத்திய ஈரானில் உள்ள பழம் மற்றும் காய்கறி சந்தையில் ஈரானின் விமானப்படை ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.


ஈரான் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள தெஹ்ரானில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தெற்கே உள்ள டோர்ச்சே நகரில் பயிற்சியின் போது விமானப்படை ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் காய்கறி மற்றும் பழங்கள் சந்தையில் விழுந்து நொறுங்கியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் விமானி மற்றும் துணை விமானி இருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். நாட்டின் முக்கிய அணுமின் நிலையம் அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. சந்தைப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்த இடிபாடுகளையும், அந்த இடத்திலிருந்து வந்த புகைமண்டல காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக விபத்து நடந்துள்ளது. சமீபத்தில், மேற்கு நகரமான ஹமேடன் அருகே ஒரு எப்-4 போர் விமானம் விழுந்து நொறுங்கி, அதன் விமானிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.


ஈரான் பல ஆண்டுகளாக பல ஆபத்தான விமான விபத்துகளைச் சந்தித்துள்ளது. மேற்கத்திய தடைகள் விமான பாகங்களை அணுகுவதைத் தடைசெய்துள்ளன. இதனால் ராணுவ மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பழைய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement