போராட்டம் என்பது இந்தியரின் ஜனநாயக உரிமை: சொல்கிறார் ராகுல்

49

புதுடில்லி: அமைதியான போராட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமை என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைதியான போராட்டம் எங்கள் வரலாற்று உரிமை. அது எங்கள் ரத்தத்தில் உள்ளது; ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமையும் ஆகும். பிரதமருக்கு எதிராக நாட்டின் நலனுக்காக அச்சமின்றி குரல் எழுப்பிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை பற்றி நான் பெருமைப்படுகிறேன்.


அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டின் நலன் சமரசம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது தரவுகளை அமெரிக்காவின் கைகளுக்கு செல்லும். இந்த உண்மையை நாட்டின் முன் கொண்டு வர முயற்சித்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் பிற நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது, சர்வாதிகார மனப்பான்மையும் கோழைத்தனமும் என்பதற்கான சான்றாகும்.

காங்கிரஸ் கட்சியும் நானும் எங்கள் நிர்வாகிகளும்நிற்கிறோம். அதிகாரத்திற்கு உண்மையின் கண்ணாடியை காட்டுவது குற்றமல்ல; அது தேசபக்தி. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரசார், டில்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் சட்டையை கழற்றி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.



@block_B@

சவால்

ராகுல் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து காட்ட முடியுமா என பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறேன்.. டிரம்ப் விதித்த வரி விதிப்புகளை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள், வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீனை செய்து வருகின்றன. நீங்கள் மவுனமாக இருப்பது ஏன்? உங்களால் செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும். நீங்கள் அமெரிக்க பிடியில் உள்ளீர்கள். முற்றிலும் அமெரிக்காவிடம் சரண் அடைந்துவிட்டீர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார். block_B

Advertisement