மாணவர்கள் எதிர்காலத்தில் அலட்சிய போக்கு: திமுக அரசு மீது இபிஎஸ் தாக்கு
சென்னை: மாணவர்கள் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் திமுக அரசு செயல்படுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கூட்டுறவுத் துறை சார்பில், கடந்த அக்டோபர் மாதம் எஸ்ஆர்பி மற்றும் டிஆர்பி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இதுவரை முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது திமுக அரசு.
பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இதுவரை வெளியிடாத விடியா திமுக அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது.தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
கோவில் சொத்துக்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை:சென்னை ஐகோர்ட் அறிவுரை
-
ஐகோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய தாமதம்
-
மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்
-
ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
சிதைந்த கனவுகளும்,வாழ்க்கையும்
-
சிதைந்த கனவுகளும்,வாழ்க்கையும்