விருதை கூட்டணி கட்சிக்குத்தான் அ.தி.மு.க.,மாவட்ட செயலர் 'சூசகம்'
க டந்த சட்டசபை தேர்தலில், விருத்தாசலம் தொகுதியை தி.மு.க., அதன் கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு ஒதுக்கியது. அப்போது அக்கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தேர்தலில் களம் இறங்கினார்.
அதேபோல், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா போட்டியிட்டார். பா.ம.க., மாவட்ட செயலர் கார்த்திகேயன் பா.ஜ., கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இதில், பிரேமலதா 25,908 ஒட்டுகள் பெற்று டிபாசிட் இழந்தார். இந்நிலையில், தி.மு.க., வுடன் தற்போது தே.மு.தி.க., கூட்டணி வைத்துள்ளதால், பிரேமலதா மீண்டும் விருத்தாசலம் தொகுதியில் நிற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல், தி.மு.க.,வினருக்கே சீட் ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், கடந்த 2021ம் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்த நுாறு நாட்களுக்குள் விருத்தாசலம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என, அப்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால், பலர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் விருத்தாசலம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சியில் அமர்ந்தால், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்.
இதனால், விருத்தாசலம் எளிதில் மாவட்டமாக உருவாகும் என அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், விருத்தாசலத்தில் நேற்று நடந்த ஜெ., பிறந்தநாள் விழாவில், அ.தி.மு.க., மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., வழக்கமாக அணியும் வெள்ளை சட்டை அணியாமல், மஞ்சள் சட்டை அணிந்து வந்திருந்தார்.
இதனால், ஜெ., பிறந்தநாளில், விருத்தாசலம் தொகுதியை, கூட்டணி கட்சியான பா.ம.க., விற்கு ஒதுக்குவதை சூசகமாக கட்சி நிர்வாகிகளுக்கு சொல்ல வராரோ என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன், விருத்தாசலம் தனிியார் மண்டபத்தில் நடந்த அ.தி.மு.க., கூட்டம் ஒன்றில், பங்கேற்ற அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., நான் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட மாட்டேன் என ஓப்பனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
-
கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை
-
இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
-
2025ல் அரசு போக்குவரத்து கழகங்களில் 1,444 விபத்துகள்; 463 பேர் உயிரிழப்பு
-
தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
-
ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி