இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: 'அரசு வழங்கிய இலவச மொபைல் போன் வாங்கி, ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தால், பார்வை குறைபாடு மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், புது போன் பெற விண்ணப்பிக்கலாம்' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பார்வை குறைபாடுடைய மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவசமாக மொபைல் போன் வழங்கப்படுகிறது.
கல்லுாரி மாணவர்கள், வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் சுய தொழில் புரிவோர், அரசு வழங்கும் இலவச மொபைல் போன் பெற தகுதியானவர்கள்.
அரசிடம் இலவச மொபைல் போன் வாங்கி, ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தால், புது போன் பெற, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம். 'இ - சேவை' மையம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மூதாட்டியின் கண்கள் தானம்
-
கட்டட தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்
-
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது
-
சைவம், வைணவம் குறித்து இழிவு பேச்சு: மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு
-
முன்னாள் அமைச்சர் மல்லாடிக்கு காங்., துணை தலைவர் கண்டனம்
-
6000 டன் நெல்:அரசு நேரடி கொள்முதல் மையங்களில் பெறப்பட்டது:வியாபாரிகளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை