ஜெ.பிறந்த நாள் விழா
பண்ருட்டி: பண்ருட்டியில் ஜெ., பிறந்தநாள் விழாவில் ஏராளமானோர் கலந்த கொண்டனர்.
பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை கட்சி அலுவலகத்தில் இருந்து நகர செயலாளர் மோகன் தலைமையில், அக்கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு நான்குமுனை சந்திப்பில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அவைத்தலைவர் ராஜதுரை, முன்னாள் எம்.எல்.சி., சிவராமன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற ரவிசந்திரன், சிறுபான்மை பிரிவு தாஜீதீன், நகர ஜெ., பேரவை செயலர் செல்வம், முன்னாள் துணை செயலர் இஸ்மாயில், நகர இணை செயலர் சத்யா கலைமணி, உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஜெ., பேரவை மாவட்ட இணை செயலர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
வக்கீல் கோபாலகிருஷ்ணன், துணை செயலர் வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப நகர செயலர் பூபதி, மகளிரணி செயலாளர் பிரியாபாக்கியராஜ், சுவாமிபாக்கியராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சக்ரபாணி, லதாசங்கர், ரமேஷ், ராமலிங்கம், காய்கறி வியாபார பிரமுகர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
-
கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை
-
இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
-
2025ல் அரசு போக்குவரத்து கழகங்களில் 1,444 விபத்துகள்; 463 பேர் உயிரிழப்பு
-
தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
-
ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி