'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் பள்ளியில் பாடம்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி
புதுடில்லி: நீதித்துறையில் ஊழல் என்னும் பாடம் என்.சி.இ.ஆர்.டி., பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டதற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
@என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்பது தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் இன்று எதிரொலித்தது.
இன்று நீதிமன்றம் கூடியதும், தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் மூத்த வக்கீல் கபில் சிபல் புகார் எழுப்பினார். 'நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்று கபில் சிபல் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:
நீதித்துறைக்கு யாரும் களங்கம் கற்பிப்பிதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் நான் என் கடமையை செய்கிறேன். இது ஒரு திட்டமிட்ட செயல் என தோன்றுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தன் கடும் அதிருப்தியை பதிவு செய்வதாக கூறிய தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று மாலை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (59)
tmrvelmurugan 0 - ,இந்தியா
25 பிப்,2026 - 20:28 Report Abuse
அப்ப நீங்க இடதுசாரி சிந்தனை இல்லாமல் வலது சாரி சிந்தனையோடு தீர்ப்பு வழங்க வேண்டும் அதாவது அரசியலமைப்பு சட்டத்தின் படி இல்லாமல் மனு சட்டத்தின் படி தீர்ப்பு வழங்க வேண்டும் என கூறுகிறீர்களா 0
0
Reply
R K Raman - சென்னை,இந்தியா
25 பிப்,2026 - 20:07 Report Abuse
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊழல் பற்றிய விஷயம் தவறு என்று சொல்கிறார். ஊழல் இல்லை என சொல்லவில்லை... ஆகையால் விஷயம் வெளியில் தெரிந்துதான் தவறு என்று நினைத்துக்கொண்டு உள்ளது போல் இருக்கிறது 0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
25 பிப்,2026 - 18:53 Report Abuse
நீதித்துறையில் ஊழல் இல்லை என்று சொல்ல முடியுமா. ஒருவர் வீட்டில் பணக்குவியல் எரிந்தது. இன்னொருவர் வீட்டு வாசல் படியில் பணக்கட்டுகளை வைத்து விட்டு போனார்கள். மாணவர் தெரிந்து கொண்டால் என்ன. இல்லாததை சொல்லவில்லையே. 0
0
Reply
aaruthirumalai - ,
25 பிப்,2026 - 18:49 Report Abuse
கல்லூரி மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும். 0
0
Reply
chennai sivakumar - chennai,இந்தியா
25 பிப்,2026 - 18:33 Report Abuse
Why our honourable chief justice is getting upset?? Fact is always bitter. 0
0
Reply
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
25 பிப்,2026 - 18:31 Report Abuse
நீதித்துறையில் லஞ்சம் இல்லை என்று நீதியரசர் நெஞ்சை தொட்டு சொல்ல முடியுமா?. அப்படி இருக்க பழைய நீதிபதி சொல்லியதும் நீதித்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 0
0
Reply
அப்பாவி - ,
25 பிப்,2026 - 18:16 Report Abuse
எட்டாங்கிளாஸ் சின்னப் பசங்க. 12 ங்கிளாசில் சொல்லிக் குடுங்க. 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
25 பிப்,2026 - 17:58 Report Abuse
சட்டம் ஒன்று. உயர்நீதி மன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர்களாயே நியமிக்கப் பட்டவர்கள்.
அப்படி இருக்கையில் ஒரு உயர் நீதி மன்றம் கொடுக்கும் தீர்ப்புகளுக்கு
உச்ச நீதி மன்றம் ஏன் தடை விதிக்கிறது. அந்த தீர்ப்புகளை மாற்றுகிறது. எந்த அடிப்படையில்
தீர்ப்பு மாறுபடுகிறது ? ஒரே சட்டம் இருக்கும்போது அதன் கீழ் ஏன் தீர்ப்புகள் மாறுபடுகின்றன ? உயர் நீதி மன்ற நீதிபதிகள் தானே மிக அதிகமாக உச்ச நீதி மன்றத்திற்கு நியமிக்கப் படுகிறார்கள். அப்படியெனில் உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் " சட்டத்தின் " அடிப்படையில் தான் தரப் படுகிறது என்பது எப்படி சரியாகும். உயர் நீதி மன்ற ஒரு அமர்வு நீதிபதி தன் முன்
வைக்கப் படும் வாதங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றை சட்டத்தின் படி ஆராய்ந்து ஒரு தீர்ப்பு வழங்குகிறார். அந்த தீர்ப்பை அதே உயர் நீதி மன்றத்தின் 2 நீதிபதிகள் விசாரித்து அந்த தீர்ப்பை உறுதி செய்வார்கள் அல்லது ரத்து செய்வார்கள். இந்த 2 நீதிபதிகள் அமர்வு எந்த அடிப்படையில் முதல் தீர்ப்பை ரத்து செய்கிறார்கள் என்றும், முதல் தீர்ப்பு எந்த வகையில் சட்டத்தின் வரையறை மீறுகிறது என்று சொல்ல வேண்டும். If there is a judicial misinterpretation, lack of judicial application of mind, then what is the accountability to the judge/S concerned. How does the SC collegium is going to assess the situation.
The faith in the entire justice tem is eroding fast. This the CJI should ponder over before passing sweeping comments on the public. Self introspection by CJI and his colleagues both SC and HCs is the immediate need of the hour. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
25 பிப்,2026 - 17:53 Report Abuse
காரணமும் காரியமும் நீங்களே என்றால் கசக்கிறது. ஒரு சாதாரண மனிதன், பதவியில் இல்லாத நேர்மையான ஒரு நபரின் வீட்டில் 50 கோடி ரூபாய் தீ பிடித்து எறிந்தால் என்ன நடக்கும்? IT, ED, CBI, Police, EOW, FEMA போன்ற 1000 அரசு அலுவலர்கள் அடுத்த 90 நாட்கள் அவன் வீட்டை முற்றுகை இடுவார்கள். கேட்கும் கேள்வியில் அந்த குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும். ஆனால் தலை நகரில் நடந்தது என்ன என்பது தான் மக்களின் கேள்வி? 0
0
Reply
Palanisamy Narayanasamy - coimbatore,இந்தியா
25 பிப்,2026 - 17:32 Report Abuse
அய்யா, இந்த அறச்சீற்றத்தை நம்ம மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புகளிலும், அங்கேயுள்ள அய்யாக்களின் நடவடிக்கைகளிலும் உங்களால் காட்ட முடியுமா???? 0
0
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
25 பிப்,2026 - 19:50Report Abuse
பொன்முடிக்கும் கரூர் செந்தில் பாலாஜிக்கும் கொடுத்தார்களே ஜாமீன் என்ன செய்யலாம்? 0
0
Reply
மேலும் 48 கருத்துக்கள்...
மேலும்
-
ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
-
கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை
-
இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
-
2025ல் அரசு போக்குவரத்து கழகங்களில் 1,444 விபத்துகள்; 463 பேர் உயிரிழப்பு
-
தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
-
ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி
Advertisement
Advertisement