அமெரிக்காவில் இனி சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காது!
நியூயார்க்: சட்டவிரோத குடியேறிகள், வணிக லாரிகளை ஓட்டுவதற்கான, 'லைசென்ஸ்' பெறுவதை தடுக்கும் வகையில் 'டெலிலா' என்ற பெயரில் புதிய சட்டத்தை பார்லிமென்ட் நிறைவேற்றவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவில், சட்டவிரோத குடியேறிகள் ஓட்டும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கடந்த 2024ல் இந்தியர் ஒருவர் ஓட்டிச் சென்ற18 சக்கர வணிக லாரி மோதியதில், டெலிலா கோல்மேன் என்ற 7 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
பார்லிமென்டில் பேசிய டிரம்ப், நாட்டில் 'டெலிலா சட்டம்' எனும் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆங்கிலம் பேசத் தெரியாத, சாலை விதிகளை படிக்க முடியாத சட்டவிரோத குடியேறிகளால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இதனால், எந்த மாகாணமும் சட்டவிரோத குடியேறிகளுக்கு வர்த்தக டிரைவர்ஸ் லைசென்ஸ் வழங்கக்கூடாது, என்று வலியுறுத்தினார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று தெரிந்தபின் நாட்டைவிட்டு துரத்த வேண்டியதுதானே…
ட்ரம்ப் ஆட்சியில் கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது
நம்ம ஊரில் 99% விதிமீறித் தான் போக்குவரத்து நடக்கிறது.இதில் ட்ரம்பின் சிந்தனை சரியேமேலும்
-
'வாட்டர் - புளூ கோல்டு' அங்கீகாரம் திருப்பூர் சாய ஆலைகள் எதிர்பார்ப்பு
-
இந்திய சோலார் பேனல்களுக்கு 126 சதவிகிதம் வரி விதித்தது அமெரிக்கா
-
இந்த ஆண்டும் அமோகம்தான் மாம்பழ உற்பத்தியாளர்கள் நம்பிக்கை
-
பிரதமர் அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது 'கபே 3' விதிகள்
-
எண்கள்1 மற்றும் எண்கள்2
-
'இலவசங்கள் எங்களை வதைக்கும்': தமிழக தொழில் நிறுவனங்கள் அலறல்