'வாட்டர் - புளூ கோல்டு' அங்கீகாரம் திருப்பூர் சாய ஆலைகள் எதிர்பார்ப்பு
திருப்பூர்: தினமும், 12 கோடி லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும், திருப்பூர் சாய ஆலைகளுக்கு, 'வாட்டர் - புளூ கோல்டு ' அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திருப்பூரில் உள்ள, 350க்கும் அதிகமான சாய ஆலைகள், பின்னலாடை உற்பத்திக்கான சாயமிடும் சேவைப்பணியை செய்து வருகின்றன; கழிவுநீர் சுத்திகரிப்புக்காக, 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன; தினமும் உருவாகும், சாயக்கழிவுநீர், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.
இந்த கழிவுநீரில் இருந்து, 12 கோடி லிட்டர் அளவுக்கு சுத்தமான தண்ணீர் பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில், மீண்டும் சாயமிட பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் இந்த சுத்திகரிப்பு பணிக்கு, சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம், சாய ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் தொடர்கிறது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:
சாயத்தொழிலின் தரத்தை உறுதி செய்ய, ஆண்டுக்கு, 10 வகை சான்றிதழ்களை பெற வேண்டியுள்ளது; லட்சக்கணக்கான ரூபாய் செலவும் ஏற்படுகிறது. உயர் தரச்சான்று பெறுவதற்கான செலவுக்கு, 75 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். தினமும், 12 கோடி லிட்டர் தண்ணீரை மறுபயன்பாட்டுக்காக சுத்திகரிப்பதால், 'வாட்டர் - புளூ கோல்டு' என்ற உயரிய அங்கீகாரத்தை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இந்த அங்கீகாரத்தை வழங்குவதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகளை திருப்பூர் தயாரிக்கிறது என்ற அடையாளத்தை உலக அரங்கில் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்
-
மாநில கிரிக்கெட் போட்டி: வெண்கலம் வென்று ராமநாதபுரம் வீரர்கள் சாதனை
-
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்; புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி
-
தி.மு.க., கொடியுடன் வந்த காரை மறித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் போலீசாருக்கு 'டிமிக்கி'
-
கடலாடி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை