'நோட்டா' நடைமுறை வந்தபின் தலைவர்களின் தரம் உயர்ந்துள்ளதா?: சுப்ரீம் கோர்ட் அதிரடி கேள்வி
- டில்லி சிறப்பு நிருபர் -
தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிடும் பட்சத்தில், அவரைப் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கும் நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பின் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களின் தரம் உயர்ந்துள்ளதா?' என, கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது ஒரு தொகுதியில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தால், அங்கு தேர்தல் நடத்தப்படாமல் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
இத்தகைய இடங்களிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், வாக்காளர்கள் தங்களுக்கு அந்த வேட்பாளரை பிடிக்கவில்லை என்றால், 'நோட்டா' எனப்படும், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், சட்டக் கொள்கை அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
'நோட்டா' நடைமுறை வந்த பின், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களின் தரம் உண்மையில் மேம்பட்டுள்ளதா? ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் இருக்கும்போது தேர்தல் நடத்தி, அதில், 'நோட்டா' அதிக ஓட்டுகள் பெற்றால், அந்தத் தொகுதியில் பிரதிநிதி இல்லாமல் ஒரு வெற்றிடம் உருவாகும்.
சமூகத்தில் வசதி படைத்தவர்கள் குறைவாகவே ஓட்டளிக்கின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே அதிக அளவில் ஜனநாயகக் கடமையை ஆற்றுகின்றனர்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
மேலும்
-
ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
-
கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை
-
இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
-
2025ல் அரசு போக்குவரத்து கழகங்களில் 1,444 விபத்துகள்; 463 பேர் உயிரிழப்பு
-
தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
-
ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி