தி.மு.க., கொடியுடன் வந்த காரை மறித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் போலீசாருக்கு 'டிமிக்கி'
ராமநாதபுரம்: ஓசூரில் அரசு ஊழியரை காரை ஏற்றி தி.மு.க., பிரமுகரின் மகன் கொலை செய்த சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., ஐ.டி.,விங் சார்பில் ராமநாதபுரத்தில் தி.மு.க., கட்சி கொடி பொருத்தி வந்த காரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிலாளர் நலத் துறையில் உதவி ஆய்வாளராக பணி புரிந்தவர் சிவமூர்த்தி. இவரது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தியிருந்தார். அப்போது காரில் வந்த இளைஞர்கள் வாகனத்தை எடுக்க தொடர்ச்சியாக ஹாரன் அடித்ததால் சத்தம் கேட்டு சிவமூர்த்தி வெளியே வந்தார். அவருடன் காரில் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர். சிவமூர்த்தி மகன் கிருபாகரன், மனைவி அம்சவேணி, 6 மாத குழந்தையுடன் வெளியே வந்தனர்.
இதில் ஆத்திரமடைந்த ஒருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று சிவமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வேகமாக மோதினார். இதில் சிவமூர்த்தி பலினார். விசாரணையில் காரை ஏற்றியவர் தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் மகன் ஆதித்யா என்பதும், அவர் நண்பர்களுடன் காரில் வந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஆதித்யா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க.,வினர் அராஜகத்தை கண்டித்து ராமநாதபுரம் அ.தி.மு.க., ஐ.டி.விங்.,மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் ராமநாதபுரம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் தி.மு.க., கட்சி கொடி பொருத்தி வந்த காரை வழிமறித்து, 'தி.மு.க.,வினர் கார் என்றால் ஏற்றி கொலை செய்வீர்களா,' என சிறிது நேரம் கோஷமிட்டனர். அதன் பிறகு கலைந்து சென்றனர்.
அதே பகுதியில் பா.ஜ., தெருமுனை பிரசாரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போதும், அவர்களுக்கு தெரியாமல் அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும்
-
சர்ச் கட்டுவதை எதிர்த்து போராட்டம்; பெண்கள் மூவர் மயக்கம்: மாரடைப்பில் முதியவர் பலி
-
கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை
-
தீமைகளை நினைவூட்டும் கண்ணாடி: இஸ்ரேலில் போர்வீரர்கள் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி பதிவு
-
28 ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிப்பு: ராமதாஸ்
-
தமிழகம் வருகிறார் அமலாக்கத்துறை இயக்குநர்
-
ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்டுப்பாடு