உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா
ஒட்டாவா: தங்கள் நாட்டில் நிகழும் வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை இந்தியா வர உள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி காலத்தில், காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் மறுத்து வந்தது. மேலும், கனடா தனது மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டியது. இதன் காரணமாக இருநாடுகளாக தூதரக ரீதியிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கனடாவில் மார்க் கார்னி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, இந்தியா - கனடா இடையே மீண்டும் சுமூகமாக உறவு நீடித்தது. இந்த சூழலில், கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது, எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ஏஐ சார்ந்த வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த நிலையில், கனடாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அங்குள்ள பிரபல செய்தி நிறுவனத்திடம் கனடா அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அத்தகைய சம்பவங்கள் இனி தொடராது என்று நம்புவதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை உட்பட, இருநாடுகளுக்கு இடையே மிகவும் வலுவான தூதரகத் தொடர்புகள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதன்மூலம், இந்தியாவுடனான சுமூகமான உறவை புதுப்பிக்க கனடா விரும்புவது தெரிய வந்துள்ளது.
கனடாவில் வாழும் இந்துக்களுக்கும் விடியல்.
இதற்கு முக்கிய காரணம் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்தான். அவர்தான் Justin Trudeau வால் இரண்டு நாடுகளுக்கும் ஏற்பட்ட விரிசலை சரி செய்தார். இதற்காக தோவல் பிப்ரவரி 7, 2026 அன்று கனடாவிற்கு (ஒட்டாவா) இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு கனடா நாட்டுப் பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ட்ரூயினுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக இரண்டு நாட்டு உறவை சீராக்கினார். மேலும் நமது உளவாளி ஒருவரை கனடா நீதிமன்றம் ஒப்படைக்க சொல்லியும் அவரை பிடித்த கனடா நாட்டு உளவாளி யார் அவரது பெயரையும் கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும் என சொன்னதற்கு புதிய அரசின் பிரதமரான இந்த Mark Carney யின் அரசு வக்கீல் இது ஒரு மறைமுக ஆபரேஷன் இதை பொது வெளியில் பகிர முடியாது. மேலும் இந்தியாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை சொல்லி ஒருவழியாக வழக்கை முடித்து விட்டார்கள். அதன் பின்பே இரண்டு நாடுகளுக்கும் உறவு சீர்பட துவங்கியது அதன் விளைவுதான் கனடா பிரதமரின் இந்திய விஜயம்.மேலும்
-
தேர்தல் நேரத்தில்தான் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஞாபகத்துக்கு வரும்: இபிஎஸ்
-
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணி திணறல் ஆட்டம்
-
அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு சிக்கல்
-
48 மணி நேரத்தில் விமான டிக்கெட் ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது!
-
ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
-
எளியவர் இதயங்களை இன்னும் ஆள்கிறார் எம்ஜிஆர்: திமுகவினர் 'ஷாக்' ஆகும் வீடியோ வைரல்!