தற்செயலாக நடந்த தவறு: நீதித்துறை குறித்த பாடப்புத்தகத்திற்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
புதுடில்லி: சிபிஎஸ்இ எட்டாம் வகுப்புக்கான சமூக அறவியல் புதிய பாடத்தில் நீதித்துறை குறித்த பாடம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அதற்காக மன்னிப்பு கோரியுள்ள என்சிஇஆர்டி, அந்த பாடத்தை திரும்ப பெற்றுக் கொண்டது.
இது தொடர்பாக என்சிஇஆர்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எட்டாம் வகுப்புக்கான '' Exploring Society: India and Beyond தொகுதி 2'' சமூக அறிவியல் பாடப்புத்தகம் கடந்த 24 ம் தேதி வெளியிடப்பட்டது. புத்தகத்தை பார்த்த பிறகு தான், சில பொருத்தமற்ற உள்ளடக்கம் மற்றும் நீதித்துறையில் தவறு ஆகியன 4வது பாடமான '' நமது நீதித்துறையில் சமூகத்தின் பங்கு''( பக்கங்கள் 125 - 142) என்ற தலைப்பில் இடம்பெற்று இருந்ததை அறிந்து கொண்டோம். மத்திய கல்வி அமைச்சகமும் இதனை கண்டறிந்ததுடன், மறு உத்தரவு வரும்வரை, புத்தக விநியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நீதித்துறை மீது உயர்ந்த நம்பிக்கை வைத்துள்ளோம். இந்திய அரசியல் சாசனத்தை நிலைநிறுத்துகிறது. அடிப்படை உரிமைகளை பாதுகாக்கிறது என்பதை அறிந்துள்ளோம். புத்தகத்தில் உள்ள பிழை தற்செயலானது. பாடத்தில் பொருத்தமற்றவற்றை சேர்த்ததற்கு என்சிஇஆர்டி வருத்தம் தெரிவித்து கொள்கிறது.
அரசியலமைப்பின்படி அமைக்கப்பட்ட எந்த அமைப்பின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ என எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. தொடர் மறு ஆய்வு முறையின்படி ஆக்கப்பூர்வமான கருத்துகளை கேட்டறிய வெளிப்படையாக உள்ளோம். குறிப்பிட்ட அந்த பாடம் முறையான ஆலோசனைக்கு பிறகு மீண்டும் எழுதப்படும். நீதித்துறை குறித்த கருத்துக்கு மீண்டும் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் என்சிஇஆர்டி கூறியுள்ளது.
சர்ச்சை
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு க்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தாமாக முன்வந்து இந்த விவகாரரத்தை விசாரணைக்கு எடுத்தார்.
எந்த தவறும் இல்லை. மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. ஊழல் என்ற கான்செர் இந்தியாவின் நுரையீரலில் பரவி விட்டது. அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு. ஆர் எஸ் எஸ் மட்டுமே இந்த ஆபரேஷனை பண்ணமுடியும்.
சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் ஒண்ணும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் இல்லை. இங்கே கீழ்கோர்ட்டிலிருந்து மேலே போனவர்கள்தான். இந்தியாவில் ஊழல் இல்லாத இடமே இல்லை. ஊழல் செய்பவர்களைப் பிடித்து தண்டனை குடுப்பதுதான் நடப்பதில்லை. ஏற்கனவே கையும் களவுமா பிடிபட்ட நீதிபதியை ஒண்ணும்.பண்ண முடியலை. இதை பாடத் திட்டத்தில் வெச்சு சொன்னா மட்டும் தடை போடுவாங்களாம். ரொம்ப நல்லவங்கோ.
ரொம்ப நாளைக்கு அப்றம் இன்னக்கிதான் அப்புசாமி ஒரு உருப்படியான comment ah போட்ருக்காப்ல அதுவும் நாலு வரிக்கு மேல், பாராட்டுக்கள்!
உண்மை வெளியே தெரிஞ்சா ஒருபயலும் மதிக்க மாட்டான்னு பயமா இருக்குமோ?
எந்த ஒரு உண்மையையும் அதனால் தேசத்திற்கு ஏற்படும் ஆபத்துகளையும் பாடத் திட்டத்தில் சேர்த்து விடவே கூடாது என்பதில் நீதிமான்கள் மிகவும் துடிப்புடன் இருக்கிறார்கள் கற்பனை காவியங்களை படிப்பதற்கு இந்த பள்ளிக்கூடங்கள் எதற்கு அதற்குத்தான் மாதம் ஒருமுறை பத்திரிகைகளும் நாவல்களும் இருக்கிறதே அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் தொடர்பான வழக்கை ஒத்தி வைத்தது போல இந்த வழக்கையும் ஒத்தி வைத்துவிட்டு நிம்மதியாக தூங்கி இருக்கலாமே உள்ளதைச் சொன்னால் இவர்களுக்கு உடம்பு எரிகிறது
மறுபடியும் ஒரு தடவை அசிங்கப்பட்டார்!
பிழையான தீர்ப்புகளுக்காக மன்னிப்புக் கேட்டதுண்டா?. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் அளிக்கப்பட்டது?.
நீதிபதிகளுக்கு வந்தா Blood, சாமானியனுக்கு வந்தா தக்காளி Chutney யா?
இந்த தவறு தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை. தீர விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.மேலும்
-
தேர்தல் நேரத்தில்தான் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஞாபகத்துக்கு வரும்: இபிஎஸ்
-
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணி திணறல் ஆட்டம்
-
அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு சிக்கல்
-
48 மணி நேரத்தில் விமான டிக்கெட் ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது!
-
ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
-
எளியவர் இதயங்களை இன்னும் ஆள்கிறார் எம்ஜிஆர்: திமுகவினர் 'ஷாக்' ஆகும் வீடியோ வைரல்!