பிரதமரின் தமிழக வருகைக்கு பிறகு அதிமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் நாகேந்திரன்

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு, அதிமுக உடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


சென்னையில் பாஜ தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், அவருடைய மகனுக்காக உழைக்கிறார். திறமையான ஆட்சி இல்லை. நீதி நிர்வாகத்தை பராமரிக்க முடியவில்லை. கஞ்சா, போதை பொருட்கள் புழக்கம் உள்ளது. போலீசார் சரியாக செயல்படாததே காரணம். நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை.


காங்கிரசை போல் கூட்டணி ஆட்சி என்ற பிடிவாதம் கிடையாது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும்.


நிறைய பேர் கட்சி ஆரம்பித்துள்ளனர். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement