நீதித்துறை ஊழல் குறித்த பாடத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை
புதுடில்லி: நீதித்துறையில் ஊழல் என்ற சிபிஎஸ்இ 8 ம் வகுப்பு பாடத்திற்கு தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி என்சிஇஆர்டி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சர்ச்சை
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தாமாக முன்வந்து இந்த விவகாரரத்தை விசாரணைக்கு எடுத்தார்.
மத்திய அரசுக்கு நோட்டீஸ்
இந்த வழக்கானது தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் எம் பஞ்சோலி அமர்வு முன்ப விசாரணைக்கு வந்தது. என்சிஇஆர்டி மன்னிப்பு கேட்ட நிலையிலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், அந்த பாடத்துக்கு தடை விதித்தனர். இந்த உத்தரவை மீறினால் அது நீதித்துறை நிர்வாகத்தில் தலையீடு என கருதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததுடன், இந்த பாடத்தை தயாரித்தவர்களின் பெயர்கள் மற்றும் தகுதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
தலைமை நீதிபதி கூறுகையில், "அவர்கள் தோட்டாக்களை சுட்டதால், நீதித்துறை ரத்தம் சிந்துகிறது. இன்று யாரும் ஏதும் சொல்லலாம். ஆனால், நம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். பாடம் ஆன்லைனில் உள்ளது. இணையதளத்திலும், கடைகளிலும் கிடைக்கிறது. இது திட்டமிட்ட நடவடிக்கை. இந்திய நீதித்துறை எவ்வாறு ஊழல் நிறைந்ததாக சித்தரிக்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது, என்ன செய்தி அனுப்பப்படும் என்பது தெளிவாகிறது. என்ன கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர் சமூகத்திற்கு முதலில் சொல்லி கொடுக்க வேண்டும். உண்மையில் சமூகத்தின் ஒரு பிரிவு கூட தொடக்கூடாததாக இருக்கக்கூடாது. இது ஆழமாக வேரூன்றிய நன்கு திட்டமிடப்பட்ட சதி," எனத் தெரிவித்தார்.
மேலும்,
*தேசிய பாடத்திட்டம் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இந்த பாடத்திற்கு ஒப்புதல் அளித்த கற்றல் கற்பித்தல் குழுவின் உறுப்பினர்கள் தொடர்பான விரிவான பட்டியல் அடங்கிய விவரங்கள்
*பாடத்தை எழுதிய பொறுப்பான பாடநூல் பாடநூல் மேம்பாட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் யெபர்கள் மற்றும் ஆவணங்கள்
* குறிப்பிட்ட பாடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த விவரங்களை வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது தாக்கல் செய்ய வேண்டும்.
என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த புத்தகத்தை அச்சிடவும், விற்பனை செய்யவும் முழுமையான தடை விதிக்கிறோம். புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் அரசு உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு அல்லது மற்ற சட்டங்களின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி மத்திய கல்வி விவகார செயலாளர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ஒரு துணை நீதிபதி தொடங்கி அனைத்து அரசு அலுவலர் குடும்பம் என்பதை அவரது குடும்பம், அவரது தாயார், தந்தை, சகோதர சகோதரிகள், அவரது மனைவியின் தாயார், தந்தை, சகோதர சகோதரிகள், சித்தப்பா, அவரது மனைவி, குழந்தைகள் அத்தை அவரது கணவர் குழந்தைகள் என்று வரையறை செய்து அவர்கள் சொத்துக்களை வருட வருடம் இணையத்தில் பதிவு ஏற்றம் செய்ய சொல்லுங்கள். அதை வருடம் ஒரு முறை CAG ஆடிட் செய்யட்டும்.
தவறு இருக்கும் பட்சத்தில், 3 மாதத்தில் சொத்தை பறிமுதல் செய்யுங்கள். சிறைக்கு வழி அனுப்புங்கள். அதை செய்தால் மக்கள் உங்களை தானாகவே மதிப்பார்கள். இந்த மாதிரி தடைகள் தேவை இருக்காது.
அதற்கு ஏற்றார் போல் செயல்பட நீங்களும் முயற்சியுங்கள் . மனசாட்சியுடன் உங்களுக்குண்டான நீதி பரிபாலனம் செய்யுங்கள்
புகார் இல்லாமல் பாடத்திற்கு தடை நீதிமன்ற அதிகாரம்? நீதியின் கண் சிவந்தால், மண் சிவக்கும்? மத்திய கல்வி விவகார துறை செயலர் மத்திய அரசு முக்கிய உயர் அதிகாரி. ஜனாதிபதி அலுவலக அனுமதி இல்லாமல் விளக்கம் அளிக்க முடியாது என்ற பதிலை செயலர் அனுப்ப துணிவு உண்டா? மக்களுக்கு இந்த தியாகத்தை செய்ய முடியுமா,? அத்தியாவசிய பணியில் உள்ள அதிகாரியை பிற துறைகள் நிர்வகிக்க முடியாது. மத்திய அரசு கபில் போன்ற வழக்கறிஞர் மீது மக்கள், நிறுவனம் வழியே தெளிவான புகார் பெற்று மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் மீது புகார் பெற்று நிர்வாக குளறுபடிகளை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும். மத்திய அரசு புலிக்கு மணி கட்டும் அதிகாரம் கொண்டது.
There is no shame and disgrace in being corrupt but if called out all hell breaks loose.
தடை
அதை உடை
புது சரித்திரம் படை
உண்மை என்னும்
அக்னி குஞ்சினை தணலை
சட்டம் என்னும் பஞ்சு
மூட்டைக்குள் ஒளிக்க முயலும் எசமானர்கள்.
தடை
அதை உடை
புது சரித்திரம் படை
உண்மை என்னும்
அக்னி குஞ்சினை தணலை
சட்டம் என்னும் பஞ்சு
மூட்டைக்குள் ஒளிக்க முயலும் எசமானர்கள்.
டீ.ர். பாலுவின் கதியை பார்த்து மான நஷ்ட வழுக்கும் போடமுடியாது என நினைக்கிறார்களோ. ஆதாரங்கள் கையில இருக்கல்ல அப்பறம் என்ன பயம்.
பாடத்திற்கு தடை விதித்து விட்டீர்கள். ஊழலுக்கு எப்போது தடைவிதிப்பீர்கள்?
ஒரு நீதிபதியின் வீட்டில் எரிந்து சாம்பலான கோடிக்கணக்கான பணத்திற்கு எந்த பதிலும் இல்லை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு உள்ளாக தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள தவறிய இந்த நீதிமான்கள் நிச்சயம் ஊழல் வாதிகள் தான் பாடத்திட்டத்தை வேண்டுமானால் இவர்களுடைய அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தடுத்து விடலாம் ஆனால் மக்களின் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விட்ட உண்மையை இவர்களால் என்றும் அதிகார பலத்தினால் துடைத்து எரிந்து விட முடியாது இவர்கள் நடத்துவது நீதிமன்றம் அல்ல ஊழல் மன்றம் தான்
Judiciary must prove itselfமேலும்
-
தேர்தல் நேரத்தில்தான் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஞாபகத்துக்கு வரும்: இபிஎஸ்
-
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணி திணறல் ஆட்டம்
-
அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு சிக்கல்
-
48 மணி நேரத்தில் விமான டிக்கெட் ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது!
-
ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
-
எளியவர் இதயங்களை இன்னும் ஆள்கிறார் எம்ஜிஆர்: திமுகவினர் 'ஷாக்' ஆகும் வீடியோ வைரல்!