ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் இரு மடங்கு பெரியது; பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா
ஜெனீவா: சர்வதேச நாணய நிதியத்திடம் நீங்கள் வாங்கும் கடனை விட, ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் இருமடங்கு பெரியது என்று ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வெளுத்து வாங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிப்ரவரி 23ம் தேதி துவங்கிய ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம், மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் பல்வேறு கருத்துகளுக்கு இந்திய பிரதிநிதி அனுபமா சிங் பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது; ஜம்மு காஷ்மீரில் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றன. குறிப்பாக, கடந்தாண்டு செனாப் ரயில்வே பாலம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் மிகப்பெரிய நீண்ட ரயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் செனாப் ரயில்வே பாலம் திறக்கப்பட்டது பொய் என்று சொன்னால், பாகிஸ்தான் ஏதோ ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஜம்மு-காஷ்மீரின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ. 1.13 லட்சம் கோடியாகும். இது பாகிஸ்தான் சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கும் கடனை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி மற்றும் பொதுமக்களின் அதிருப்தியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானைப் பற்றி இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை, இவ்வாறு அவர் கூறினார்.
யார் இந்த அனுபமா சிங்?
இந்திய வெளியுறவுத் துறையில் 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு 'கேபிஎம்ஜி' நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்துள்ளார். டில்லி பல்கலையின் மேலாண்மைப் படிப்புகள் பிரிவில் எம்பிஏ பைனான்ஸ் பட்டம் பெற்றுள்ளார்.
வாசகர் கருத்து (11)
இந்தியன் - ,
26 பிப்,2026 - 20:46 Report Abuse
இது போன்று பல அரங்குகளில் இத்தகையவர்களை அடையாளம் காண்பித்து தனிமைப் படுத்தினால் நல்லது. பல வருட கால தொல்லையை ஒழிப்பது ஒரு சவால் மற்றும் பாராட்ட வேண்டிய சாதனை.
வல்லமை மிக்க இந்திய அரசினை மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஆதரித்து இன்னும் பலப்படுத்தும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
26 பிப்,2026 - 19:19 Report Abuse
நாட்டின் பிரதமர் ஷரிஃப், தொளபதி அசீம் முனீர் போற வெளி நாடு இடங்களில் எல்லாம் பிச்சை எடுக்கும் நிலை. அதை பாக்கிஸ்தான் பிரதமரே ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார். ருசியா அதிபரை பாக்கிஸ்தான் பிரதமர் சவுதியில் அப்பாய்ன்மெண்ட் இல்லாமல் சந்திக்க சென்ற போது 30 நிமிடம் காத்து இருக்க வைத்து விட்ட, இடத்தை காலி செய்ய சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது.
பாகிஸ்தானிய தீவிரவாதி மக்கள், ஹஜ் போகும் போது, சவூதி, மற்ற நாடுகள் துபாய், கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகளில் தெருவில் பிச்சை எடுப்பதை நாம் பார்க்க முடியும்.
பாகிஸ்தானிய மக்கள் இந்தியாவில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, கோதுமை, குறைந்த விலை எண்ணெய், பருப்பு போன்றவற்றை பார்த்து ஆச்சரியப்பட்டு, மோடி அவர்களை இணையத்தில் பாராட்டாத நாட்களே கிடையாது. 0
0
Reply
Anand - chennai,இந்தியா
26 பிப்,2026 - 15:50 Report Abuse
அஞ்சுக்கும் பத்துக்கும் திரும்பிய பக்கமெல்லாம் கையேந்தும் இவனுங்களுக்கு இது தேவையா? 0
0
Reply
Ganesh - Chennai,இந்தியா
26 பிப்,2026 - 14:34 Report Abuse
ஒரு தலைவனின் வெற்றி என்பது அவனுடைய தனிப்பட்ட உழைப்பால் வந்ததாக இருக்க கூடாது.. தன்னை சார்ந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும்.. தான் என்ன நினைக்கிறாரோ அதை எல்லா நிலையிலும் அழுத்தம் திருத்தமாக பதிய வைக்க வேண்டும். இதில் இன்றைய பிரதமர் சரியான வழி காட்டியாக உள்ளார்... வாழ்த்துக்கள் 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
26 பிப்,2026 - 14:22 Report Abuse
ஒட்டுமொத்த பாக்கிஸ்தான்காரர்கள் மூளையை சேர்த்தால் இந்த ஒரு பெண்மணியின் மூளைக்கு ஈடாகாது. 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
26 பிப்,2026 - 13:56 Report Abuse
சரிதானே. உலகம் முழுவதும் போய் அந்நாட்டு மக்கள் பிச்சைகாரர்களாக திரிவதே சாட்சி 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
26 பிப்,2026 - 13:54 Report Abuse
பாகிஸ்தானை கண்மூடி தனமாக ஆதரிக்கும் இத்தாலி தலைவலி குடும்பம் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறது. அத்துடன் விடியலும் மூக்கு சீந்தி அழுது கொண்டிருக்கு. இண்டி கூட்டணிக்குள் கும்மாங்குத்து நடந்து கொண்டிருக்கு. மம்முதா வங்காள தேசத்தின் முஸ்லீம் வங்காளிகள் ஒட்டு வங்கி பாசத்தால் போச்சே போச்சே என்று விம்மி விம்மி அழுது கொண்டிருக்கு. 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
26 பிப்,2026 - 13:53 Report Abuse
0
0
subash - ,இந்தியா
26 பிப்,2026 - 15:13Report Abuse
அமேரிக்கா தனது அல்லக்கை ரௌடி நாடான பாகிஸ்தானுக்கு இலவசமாக தருகிறது 0
0
Anand - chennai,இந்தியா
26 பிப்,2026 - 15:53Report Abuse
பிச்சையெடுத்து, கடன் வாங்கி வாங்குறானுவ. இதெல்லாம் ஒரு பெருமையா? 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
26 பிப்,2026 - 13:21 Report Abuse
ஆபரேசன் சிந்தூரில் வாங்கியது பாக் கிற்கு இந்திய பொருளாரத்தை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லை இதன் மூலம் தெரிகிறது? 0
0
Reply
மேலும்
-
தேர்தல் நேரத்தில்தான் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஞாபகத்துக்கு வரும்: இபிஎஸ்
-
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணி திணறல் ஆட்டம்
-
அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு சிக்கல்
-
48 மணி நேரத்தில் விமான டிக்கெட் ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது!
-
ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
-
எளியவர் இதயங்களை இன்னும் ஆள்கிறார் எம்ஜிஆர்: திமுகவினர் 'ஷாக்' ஆகும் வீடியோ வைரல்!
Advertisement
Advertisement