இந்தியா வந்தார் கனடா பிரதமர் மார்க் கார்னி

3

மும்பை: கனடா பிரதமர் மார்க் கார்னி தமது இந்திய பயணத்தின் முக்கிய அம்சமாக மும்பை வந்து சேர்ந்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வந்துள்ளார். 4 நாள் அரசு முறைப்பயணமாக அவரது பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியா வந்துள்ள அவர், தமது பயணத்தின் முக்கிய அம்சமாக மும்பை வந்து சேர்ந்துள்ளார். பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

மார்ச் 1ம் தேதி கார்னி புதுடில்லி செல்கிறார். பின்னர் மார்ச் 2ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். வர்த்தகம், எரிசக்தி, கனிமங்கள், விவசாயம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நல்குவது மற்றும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்றனர்.

அதன் பின்னர், பிரதமர் மோடியும், கார்னியும் இந்திய-கனடா நாடுகளின் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement