டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?

10

டெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி எங்கே பதுங்கி உள்ளார் என்ற விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெஹ்ரானில் ஏராளமான கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. எங்கு நோக்கினும் குண்டுமழை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களுக்கு Epic Fury என்று அமெரிக்காவும், இஸ்ரேல் Roaring Lion என்று பெயரிட்டும் தாக்குதல்களை தொடர்ந்துள்ளன. இரு தரப்பு தாக்குதல்களை எதிர்கொண்டு உள்ள ஈரான் அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

தாக்குதல்கள் நீடித்த வண்ணம் உள்ள அதே வேளையில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி எங்கே உள்ளார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. 86 வயதான கமேனி உடல்நிலை எப்படி உள்ளது? அவரின் இருப்பிடம் எங்கே உள்ளது என்ற விவரங்களை ஈரான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. அந்த விபரத்தை ஈரான் ராணுவம் மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.

இரு நாடுகளின் அதிரடி தாக்குதல்கள் அரங்கேறிய தருணத்தில் கமேனி, டெஹ்ரானில் இல்லை, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார், அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.

Advertisement