டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி

17

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு

துபாய்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் இன்று (பிப்ரவரி 28) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில், ஈரானின் அணுசக்தி தளங்கள், ஏவுகணை மையங்கள் மற்றும் கடற்படை நிலைகளை இலக்கு வைத்து இந்த "பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை" தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை ஆதரித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்கவும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும் அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறோம்.

ஈரான் பல தசாப்தங்களாக ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்கள் மூலம் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கி வருகிறது.
மேலும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஈரானிய மக்களுக்குத் துணை நிற்கிறோம்.

ஈரான் பதிலுக்கு இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லரும் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இவ்வாறு ஆண்டனி ஆல்பனீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல்களுக்கு மத்தியில் டெஹ்ரானில் இந்திய மாணவர்கள் சிக்கியுள்ள விவரம் வெளியாகி உள்ளது.

அணுசக்தி ஆயுதங்களை வைத்துள்ளது என்பது ஈரான் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு. மேலும் அணு ஆயுத திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தலை ஈரான் நிராகரிக்க, அந்நாடு மீது அமெரிக்கா நேரடி தாக்குதல்களை தொடங்கி உள்ளது. அமெரிக்காவுடன் இஸ்ரேலும் கைகோர்க்க, ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் எங்கும் குண்டுமழை பொழிந்து வருகிறது.

இருநாடுகளின் இந்த அதிரடி தாக்குதல்கள் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் உருவாகி உள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பல்வேறு நாடுகளின் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு வான்வெளி பாதைகளும் உடனடியாக மூடப்பட்டு உள்ளன.

கமேனியை குறி வைத்து அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கும் அதே தருணத்தில் அங்குள்ள இந்திய மாணவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது என்ற கேள்விகளும் ஒலிக்க ஆரம்பித்து உள்ளன.
@twitter@ https://x.com/PTI_News/status/2027723772816707736?s=20twitter

போர் சூழலுக்கு மத்தியில் தற்போது டெஹ்ரானில் பயிலும் இந்திய மாணவி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்திய அரசின் உதவியை கோரி உள்ளார்.

38 வினாடிகளே நீடிக்கும் அந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது;
நான் ஒரு இந்திய மாணவி. டெஹ்ரானில் படித்து வருகிறேன். இங்கு தற்போது காணப்படும் சூழல் நிச்சயமற்றதாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது உண்மையிலேயே தெரியாது.

வான்வழித் தாக்குதல்கள் எங்களுக்கு மிகுந்த பயத்தை உருவாக்கி இருக்கிறது. எவ்வளவு விரைவாக எங்களை இங்கிருந்து வெளியேற்றி அழைத்துச் செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுங்கள்.

நிலைமை கவலைக்குரியதாக மாறும் வரையில் காத்திருக்க வேண்டாம். எங்களுக்கு உதவுங்கள்.

இவ்வாறு அந்த வீடியோவில் மாணவி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளதோடு, இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.

Advertisement