உயர் கல்விக்கடன் வழங்கும் விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் மாவட்ட அளவிலான கல்விக்கடன் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன் தலைமை வகித்து மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான காசோலைகளை வழங்கினார். 14 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் கல்விக்கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 988 மாணவர்களுக்கு ரூ.24 கோயே 56 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் உயர்கல்வி பெறும் மாணவர்கள் கல்விக்கடன் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், அரசு, வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
-
நல்லகண்ணு என்ற மாமனிதர்!
-
ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி
-
டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
-
டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?
Advertisement
Advertisement