நள்ளிரவில் வரும் யானை பகலில் வந்ததால் அச்சம்

அந்தியூர்: அந்தியூரை அடுத்த வட்டக்காடு அருகே கும்பர-வாணி வனப்பகுதியில் இருந்து, ஒரு மாதத்-துக்கும் மேலாக, நள்ளிரவில் வரும் ஆண் யானை, வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களில் நெல், வாழை பயிரை சேதம் செய்துவருகிறது.


சில நாட்களே இரவு நேரத்தில் யானை வராத நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, கும்பர-வாணி லைன் மாரியம்மன் கோவில் வனப்பகுதி-யிலிருந்து ஒற்றை ஆண் யானை வந்தது. அங்-குள்ள வாழை தோட்டத்தில் மரங்களை முறித்து தின்று சேதப்படுத்தியது. விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டியபோது, ஆவேசத்துடன் வெளி-யேறிய யானை, பக்கத்து தோட்டத்தில் கம்பி வேலியை தள்ளி உடைக்க முற்பட்டது.


தொடர்ந்து பட்டாசு வெடித்தும், சத்தமிட்டும் விவசாயிகள் காட்டுக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் வந்த யானை, பகலிலேயே நேற்று வந்ததால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்-ளனர்.

Advertisement