ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.5200 உயர்வு

1

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 28) காலை தங்கம் விலை சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்த நிலையில், மதியம் மீண்டும் சவரனுக்கு 2800 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் 15,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் நெருக்கடிகளின் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஜனவரி 26) தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (பிப்ரவரி 27) சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


இன்றைய நிலவரம்




இந்நிலையில், இன்று (பிப்ரவரி 28) காலையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

2வது முறை அதிகரிப்பு




மதியம் மீண்டும் சவரனுக்கு 2800 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் 15,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5200 அதிகரித்தது.

வெள்ளியும் அதிகரிப்பு




தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. காலையில் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


மதியம் மீண்டும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 320 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாள் தங்கம் விலை நிலவரம்:

27-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,200

26-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,360

25-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,440

24-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,19,120

23-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,18,880

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement