பூசாரிகள் நலனுக்காக 11 அறிவிப்புகள்; வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

37


சென்னை: சென்னை மயிலாப்பூரில் நடந்த மாநாட்டில், பூசாரிகள் நலனுக்காக 11 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:

* ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அனைத்து பூசாரிகளுக்கும் புத்தாடை வழங்கப்படும்.

Tamil News
Tamil News
* பூசாரிகள் மரணமடைந்தால், வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.



* கிராம கோவில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு 75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்.
* உயிரிழந்த பூசாரிகளின் ஈம சடங்கிற்கு நிதியுதவி ரூ.10,000 வழங்கப்படும்.

* பெரிய கோவில்களில் ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு புத்துயிர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.



* பூசாரிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் திருமண நிதியுதவி மே லும் ரூ.1,000 உயர்த்தப்படும்
* பூசாரிகளின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்வி நிதியுதவி மேலும் ரூ.1,000 உயர்த்தப்படும்

* பூசாரிகளின் குழந்தைகளுக்கு முதுநிலை மற்றும் இளநிலை படிப்புகளுக்கு ஆண்டுக்கு மேலும் ரூ.2,000 உயர்த்தப்படும்.



* பூசாரிகளின் குழந்தைகளுக்கு தொழில்சார்ந்த முதுநிலை மற்றும் இளநிலை நிதியுதவி ஆண்டுக்கு மேலும் ரூ.2,000 உயர்த்தப்படும்.
* பூசாரிகளின் குழந்தைகள் தொழில் பயிற்சி நிலையத்தில் பயில வழங்கப்படும் நிதியுதவி ஆண்டுக்கு மேலும் ரூ.1,000 உயர்த்தப்படும்.

* பூசாரிகள் மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு வழங்கப்படும் நிதியுதவி 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

எல்லோருக்கும் எல்லாம்



மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசின் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டிற்கு சான்றாக இவ்விழா அமைந்துள்ளது. இக்கோட்பாடு வெறும் வாய் வார்த்தை அல்ல. நாம் சொல்வதை செயலில் நிரூபிப்பதற்கான அடையாளமே இம்மாநாடு. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படலாம். உண்மையான ஆன்மிகப் பற்றாளர்களும் இறையன்பர்களும் விரும்பக்கூடிய அரசுதான் திராவிட மாடல் அரசு.



ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலர் சொன்ன வழியில் திமுக அரசு செயல்படுகிறது. பூசாரிகள் வாழ்விலும் விடியலை ஏற்படுத்தவே திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நான் அதிகம் பங்கேற்றது அறநிலையத் துறை நிகழ்ச்சிகளில்தான். அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக யார் இருந்தார் என்று கூட மக்கள் நினைவில் இருக்காது.

சமத்துவம்



இப்போது அறநிலையத்துறை அமைச்சர் யார் என்று மக்களிடம் கேட்டால், பளிச்சென்று சேகர்பாபுவின் பெயரைச் சொல்வார்கள். கோவில் திருப்பணிகளை வேகமாக அமைச்சர் சேகர்பாபு செயல்படுத்துகிறார். சமரசமும், சமத்துவமும்தான் ஆன்மிகப் பாதையாக இருக்க முடியும். சமத்துவத்தைப் போற்றும் அனைவரையும் நாம் போற்றுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement