காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக உறுதி
நமது நிருபர்
காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது.
சென்னை அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் திமுக-இடையே முதற்கட்ட பேச்சு நடந்தது. திமுக குழுவினரை கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர். இதில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சியினர் கொடுத்துள்ளனர்.
பேச்சுவார்த்தை
அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு, ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று திமுக தலைமை உறுதி அளித்துள்ளதாக, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இது குறித்து செல்வபெருந்தகை
நிருபர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை வெற்றிகரமாக
நம்பிக்கையுடன் சென்று கொண்டு இருக்கிறது.
எந்தவித பிரச்னையும் இல்லை. காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக
ஏற்கனவே முதல்வர் கூறி இருக்கிறார். திமுக உடன் எங்களுடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. நம்பிக்கையான, உறுதியான
கூட்டணி. தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி.
திமுகவுடன்..
ஒருபோது
தமிழகத்தில் பாஜவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை என்பதில் நாங்கள் தெளிவாக
இருக்கிறோம். எங்கள் தலைவர் ராகுல் இந்த மண்ணின் மீது பற்று வைத்து
இருக்கிறார். தமிழகத்தின் மீது பற்று வைத்து இருக்கிறார்.
நாங்கள்
திமுகவுடன் தான் பேச்சு நடத்தி கொண்டு இருக்கிறோம். எத்தனை
தொகுதிகள் என்பது கையெழுத்திடும் போது தெரியவரும். இவ்வாறு
செல்வபெருந்தகை கூறினார்.
பேசாமல் இந்த ஆளு தி மு க வில் சேர்ந்து விடலாம் எல்லா வசதிகளையும் மாறி மாறி அனுபவிக்கலாம் ,
ராஜ்யசபா சீட்டுக்கு எல்லாம் காங்கிரஸ் கெஞ்சுவது என்ன ஒரு கொடுமை.. மேய்க்கப்போவது எருமை இதில் என்ன பெருமை..
ஆமாம் ராகுல் மண்ணின் மீது பற்றுள்ளார் மக்களின் மீது அல்ல. கொள்ளை அடிப்பவன் மண்ணின் மீது தான் ஆசை படுவான் வளங்களை கொள்ளை அடிக்க. உனக்கு எல்லாம் ஒரு வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை .
உங்களை வேறு வழியில்லாமல் செய்து அமுக்க வேண்டும் என்பதற்காக தானே, டிசம்பரில் தொடுத்த விவாகரத்து வழக்கு செய்தியை பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்பு வெளியிட செய்தது இந்த சாணக்கிய திருட்டு திராவிட மாடல் கட்சி. காங்கிரஸ் எலி பொறியில் அகப்பட்டது.
காங்கிரஸ் நல்லா lumpaaka அடித்து விட்டார்கள்
23 கண்டிப்பாக உண்டு அடிமை கூட்டத்திற்கு
நமது முதல்வரின் தைரியம். பொங்கலுக்கு 3000 எப்பொழுது ஒரு 5000 இவைகளை கொடுத்தும் காங்கிரஸ் இல்லாவிட்டால் தோற்று விடுவோம் என்ற பயம்.
அங்க சொல்லி இங்க சொல்லி காங்கிரசை கடைசியில் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டார். முதல்வரின் தைரியம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
சுமுகமாக போய்தான் ஆகணும் தலைவரே. உங்கள் விருப்பம் நிறைவேற்றும். வெளிய வந்தா மரண அடி விழும் என்பதை உங்க பேராகுழந்தைகளே சொல்லும்
next Dy CM, Selva perunthohai, next prime minister namma Pappu, New president priyanka . kutumba arasiyal
விசையை நம்பி விடியலை முறைத்துக் கொண்டது ஆபத்தா போயிட்டுட்சி. இப்போ அவரே அந்தரத்தில். இனிமே தீயமுக இரக்கப்பட்டு போடுற அஞ்சு பத்தை வாங்கிகிட்டு போக வேண்டியதுதான்..மேலும்
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
-
நல்லகண்ணு என்ற மாமனிதர்!
-
ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி
-
டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
-
டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?