இஸ்ரேல், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கணும்; இந்திய தூதரகம் எச்சரிக்கை
டெல்அவிவ்: இஸ்ரேல், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் இஸ்ரேல் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
* இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், எல்லா நேரங்களிலும் விழிப்புடனும் இருக்க
வேண்டும்.
* இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை இந்தியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
* https://www.oref.org.il/eng என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
* அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும்.
* அத்தியாவசியமற்ற மற்றும் தேவையற்ற பயணங்களை மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.
* உள்ளூர் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அவசர எச்சரிக்கைகளை தொடர்ந்து மக்கள் கண்காணிக்க வேண்டும்.
* ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் இந்தியர்கள் டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகலாம். +972-54-7520711 என்ற தொலைபேசி எண், cons1.telaviv@mea.gov.in மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.
* தூதரகம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய துாதரகம் அறிவுறுத்தல்
ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு இந்திய துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்திய துாதரகம் அறிவித்துள்ள அவசர அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தியர்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருங்கள்.
உள்ளூர் செய்திகளைத் தொடர்ந்து கவனியுங்கள், தூதரகத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்.
முன்னதாக, பிப்ரவரி 23-ஆம் தேதியே ஈரானில் உள்ள இந்தியர்கள் (மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட) உடனடியாகக் கிடைக்கும் விமான சேவைகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அவசர உதவி எண்கள்:
டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணிநேரமும் செயல்படும் கீழ்க்கண்ட அவசர உதவி எண்களை வழங்கியுள்ளது:
+98 912 810 9115
+98 912 810 9109
+98 912 810 9102
+98 993 217 9359
டெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் கராஜ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால், ஈரான் வான்வெளி மூடப்பட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோர்டானில் இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறனும்: இந்திய துாதரகம் எச்சரிக்கை
ஜோர்டானில் உள்ள அனைத்து இந்தியச் சுற்றுலாப் பயணிகளும், வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கு முன்னதாக உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, ஜோர்டானில் (Jordan) உள்ள இந்தியத் தூதரகம் இன்று (பிப்ரவரி 28) அன்று ஒரு அவசரப் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்திய துாதரகத்தின் முக்கிய அறிவுறுத்தல்கள்:
ஜோர்டானில் உள்ள அனைத்து இந்தியச் சுற்றுலாப் பயணிகளும், வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கு முன்னதாக உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
அங்கு தங்கியுள்ள இந்தியர்கள், சுற்றுலாப் பயணிகள் "மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாக இருங்கள்.
ஜோர்டான் நாட்டு அதிகாரிகளால் அவ்வப்போது வெளியிடப்படும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள்.
அவசர உதவி எண்:
எந்தவொரு அவசரத் தேவையிற்கும் அல்லது உதவிக்கும் ஜோர்டானில் உள்ள இந்தியத் தூதரகத்தை கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:
00962-770 422 276
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலால் பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஈரான், இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன, இது விமானப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய துாதரகம் இவ்வாறு அறிவுறுத்தி உள்ளது.
அமீரகம் அறிக்கை :
ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
ஈரான் நாட்டின் ஏவுகணைகள் இன்று எங்கள் நாட்டின் மீது ஏவப்பட்டன. அவற்றை அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் துல்லியமாக தாக்கி வெற்றிகரமாக அழித்துவிட்டன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை தளம் மீது தாக்குதல்
பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் அணி தலைமையகம் அமைந்துள்ளது. இங்கு ஈரான் ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தப் பகுதியில் புகை மண்டலமாக இருப்பதாக மனாமாவாசிகள் தெரிவித்துள்ளனர்.
where is the world chaalras NATOமேலும்
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
-
நல்லகண்ணு என்ற மாமனிதர்!
-
ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி
-
டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
-
டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?