ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்: 'ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்' என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அந்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி உள்ளதாக' அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி:
ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி உள்ளது. அந்த நாடு அணு ஆயுத வலிமை பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நாடு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை உருவாக்க வேலை செய்து வருகிறது.
இதனால் நாங்கள் பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானில் நடந்து வரும் வான்வழி தாக்குதலில் அமெரிக்காவின் பங்கை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஈரான் அச்சுறுத்தலா? இந்த துக்ளக் தான் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறார்
அமைதி காக்கிறார்கள் .... போராட்டமோ, எதிர்ப்புக் குரல்களோ இல்லை ..... காரணம் ஈரானியர்கள் ஷியா பிரிவினர் என்பதுதானா >>>>
இவன் அமெரிக்காவை அழிக்காமல் விடமாட்டான்.
world international ROUDIமேலும்
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
-
நல்லகண்ணு என்ற மாமனிதர்!
-
ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி
-
டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
-
டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?