காங்கிரஸின் தவறுகளை நாடு ஒருபோதும் மன்னிக்காது: பிரதமர் மோடி
ஜெய்ப்பூர்: ''நாடு முழுவதும் காங்கிரஸ் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது,'' என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு எச்பிவி தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் 21,863 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார். ரூ.16,686 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் எங்கும் எப்போதும் நாட்டை அவமதிக்க முயற்சி செய்கிறது.
நாட்டு மக்கள் பெருமையாக உணர்ந்தாலும், காங்கிரஸ் வெளிநாட்டினர் முன் நம் நாட்டுக்கு அவமரியாதை ஏற்படுத்த முயன்றது. நாடு முழுவதும் காங்கிரஸ் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது. அதன் விரக்தியின் காரணமாக, இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதன் மூலம் பழிவாங்குகிறது. காங்கிரஸ் ஒரு காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த காங்கிரஸ் இல்லை. அது எம்எம்சி - முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் ஆகிவிட்டது.
மன்னிக்காது
முஸ்லிம் லீக்கின் இந்தியா மீதான வெறுப்புக்கு வரலாறு சாட்சியாக உள்ளது. அதனால்தான் நாடு பிரிக்கப்பட்டது. இன்று, காங்கிரசும் அதே வழியில் செயல்படுகிறது. மாவோயிஸ்டுகளும் இந்தியாவின் செழிப்பு, நமது அரசியலமைப்பு மற்றும் நமது வெற்றிகரமான ஜனநாயகத்தை வெறுக்கிறார்கள். அவர்கள் பதுங்கியிருந்து தாக்குதல்களை நடத்துகிறார்கள். அதேபோல், காங்கிரஸ் தேசத்தை அவமதிக்க எங்கு வேண்டுமானாலும் ஊடுருவுகிறது.
காங்கிரஸின் தவறுகளை நாடு ஒருபோதும் மன்னிக்காது. தேசத்தை அவமதிப்பதும், பாதுகாப்பு படைகளை பலவீனப்படுத்துவதும் நீண்ட காலமாக காங்கிரசின் பழக்கமாக இருந்து வருகிறது. நமது படைகள் தங்கள் வீரத்திற்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றன. நாட்டிற்கு நல்லது எதுவாக இருந்தாலும், நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும் நன்மை பயக்கும் எதுவாக இருந்தாலும் அதை காங்கிரஸ் எதிர்க்கிறது. அதனால்தான் நாடு இன்று காங்கிரசுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நேருவும், பட்டேலும் எப்படி எதிர் துருவங்கள், இருவரின் பங்களிப்பு நாட்டுக்கு என்ன அப்படினு, அந்த காலத்து பெரியவர்கள் நேரில் சொன்னதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாம்னா, கருத்து நீக்கம் செஞ்சிருவாங்க. பின்ன, எப்படி தான் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தறதுனு தெரியல. கசப்பான உண்மைகளை எப்படித்தான் தெளிவுபடுத்துவது ??
நீங்கள் என்ன செய்தீர்கள் மக்களுக்கு என்று சொல்லி ஓட்டு கேளுங்கள் ....அவர்கள் சரி இல்லை என்று தானே மக்கள் உங்களை 12 வருஷத்துக்கு மேலாக ஆட்சி செய்ய தெரிவு செய்துள்ளார்கள் ....
இன்றைய , தொப்பி எல்லாம் சூப்பர்
காங்கிரஸ் ஆதிக்க தவறுகளை பிஜேபி இதுவரை திருத்தம் செய்ய வில்லை. மத்திய மாநில ஒழுங்கற்ற உறவு, நீதிமன்றம் நிர்வாகம் விட்டு விலகி தன்னிச்சையான செயல்பாடு, சாதி ஒதுக்கீட்டில் சுழற்சி முறை இல்லாமை, சிறுபான்மை மக்கள் மீது சட்டம் மீறிய சலுகைகள் மற்றும் பல. பாதுகாப்பு, பொருளாதாரம், சட்ட ஒழுங்கு பல படுத்தி இருக்கிறீர்கள். இந்திய ஒற்றுமை விரும்பாத மற்ற கட்சி ஆட்சிக்கு வந்தால், இதனை சில நிமிடங்களில் பாழ் படுத்த முடியும். பிஜேபி யை மக்கள் சூழ்நிலையால் ஏற்று வருகிறார்கள்.
பிஜேபி தவறுகளை காங்கிரஸ் மன்னிக்காது, நாடும் நட்டு மக்களும் மன்னிக்காது,
13 வருடம் ஆகுது இன்னும் காங்கிரஸ் என்றால் பயம் தான் , இன்னும் காங்கிரஸ் காங்கிரஸ் என்று அலறல் மக்கள் மறந்ததிலும் இவர் மறக்க மாட்டேங்கிறார்
பயம் நடுக்கம்மேலும்
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
-
நல்லகண்ணு என்ற மாமனிதர்!
-
ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி
-
டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
-
டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?