நான்கு வழிச்சாலையில் தண்ணீரின்றி கருகும் செடிகள்
திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியன் மற்றும் பக்கவாட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப்படாததால் கருகி வருகின்றன.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு அதில் அரளிச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விபத்தின் போது போக்குவரத்தை சீரமைப்பது. பழுதான இடங்களை சரி செய்வது சென்டர் மீடியன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பது போன்ற பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சாலையின் இருபுறம் மற்றும் சென்டர் மீடியனில் உள்ள அரளிச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாததால் கருகி வருகின்றன. ஏப்ரலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம், இந்தாண்டு பிப்ரவரியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் சென்டர் மீடியனில் புற்கள் அதிகம் வளர்ந்து வெயிலின் தாக்கத்தால் காய்ந்து உள்ளது.
தீ விபத்து ஏற்பட்டால் அரளிச் செடிகளும் எரிய வாய்ப்புள்ளது.எனவே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை முறையாக கண்காணிக்க வேண்டும்.
மேலும்
-
கமேனியை கொன்றது எப்படி: அமெரிக்கா, இஸ்ரேல் தீட்டிய ரகசிய திட்டம்
-
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
-
போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு
-
கராச்சியில் அமெரிக்க துாதரகம் சூறையாடல்; துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி
-
இளைஞர்களின் கனவை நிறைவேற்றுவதே முதன்மை இலக்கு: புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு
-
நாக்பூரில் துயரம்; வெடிமருந்து நிறுவனத்தில் தீ பற்றியதில் 17 பேர் உயிரிழப்பு