நாக்பூரில் துயரம்; வெடிமருந்து நிறுவனத்தில் தீ பற்றியதில் 17 பேர் உயிரிழப்பு

1


மும்பை: நாக்பூர் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீ பற்றியதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.


மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் எஸ்.பி.எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென மளமளவென தீ பரவியது. இதையடுத்து பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் நாக்பூரில் உள்ள ஆரஞ்சு சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பலத்த காயமடைந்தவர்களில் சிலர் அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.



தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, துயரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இது பற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement