விநாயகர் கோவிலில் மண்டல பூஜை

குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டுமகாதானபுரம், தேவேந்திர குல தெருவில் அமைந்துள்ள விநாயகர், அருள்ஜோதி மாரியம்மன், பாலமுருகன், துர்கா தேவி, மகாலட்சுமி, நவக்கிரகங்கள், மாசி பெரியண்ணசாமி, மல்லாண்டவர், கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கடந்த, 22ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இதையடுத்து, ஒவ்வொரு நாள் இரவும் மண்டல பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானமும் நடைபெற்று வருகிறது.


நேற்று இரவு ஆறாவது நாளாக, மேட்டு மகாதானபுரம் விஜயா மற்றும் கிராம மக்கள் சார்பாக நடைபெற்ற மண்டல பூஜையில் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement