ஈரான் பதில் தாக்குதல்: இஸ்ரேலில் 9 பேர் பலி
டெல் அவிவ்: ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நேற்று டெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்து இருந்தது. அப்படி தாக்குதல் நடத்த நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இருப்பினும், ஈரான் பதில் தாக்குதலில் இறங்கியது. இஸ்ரேலின் பெயிட் ஷமேஷ் நகரை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. இந்த ஏவுகணை குடியிருப்பின் மீது விழுந்ததில் 8 பேர் பலியாகினர். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் போலீசாரும் உறுதி செய்துள்ளனர். அப்பாவி மக்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டி உள்ளது.
நாடுகளுக்கு இடையிலான மோதலில் பலியாவது அப்பாவி மக்களே.