அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு கூட்டமைப்பு எச்சரிக்கை

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் போது, சரக்கு கட்டணம் மற்றும் காப்பீட்டு செலவுகளை ஏற்றுமதியாளர்களே ஏற்கும் வகையிலான ஒப்பந்தங்களை முழுமையாக தவிர்க்குமாறு இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

காப்பீடு மற்றும் சரக்கு கட்டண பொறுப்புகள் முழுவதையும் வெளிநாட்டு கொள்முதல்தாரர்களே ஏற்கும் வகையிலான ஒப்பந்தங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு ஏற்றுமதியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

போர் பதற்றத்தால் கப்பல் எரிபொருள், சரக்கு கட்டணம் மற்றும் காப்பீட்டு தொகை ஆகியவை திடீரென கடுமையாக உயர வாய்ப்புள்ளது; இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பொருளிழப்பு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த தற்காப்பு நடவடிக்கை என, கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement