சபாஷ் வைஷ்ணவி

கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, சக வீராங்கனை செவிகாவை சந்தித்தார்.
முதல் செட்டை 6-0 என எளிதாக வசப்படுத்திய வைஷ்ணவி, அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றினார். ஒரு மணி நேரம், 4 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 6-0, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் லட்சுமி பிரபா, 4-6, 2-6 என்ற கணக்கில் ரஷ்யாவின் மார்டியனோவாவிடம் தோல்வியடைந்தார்.
காலிறுதியில்...
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, நெதர்லாந்தின் ஜாஸ்மிஜ்ன் ஜோடி, தாய்லாந்தின் சாந்தா, தாசபர்ன் ஜோடியை சந்தித்தது. இதில் ராஷ்மிகா ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 6-4, 6-2 என, இந்தியாவின் சார்மதி, அனுகொண்டா ஜோடியை சாய்த்து, காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement