15 கிலோ கஞ்சா பறிமுதல் பூந்தமல்லியில் 4 பேர் கைது

பூந்தமல்லி: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நான்கு இளைஞர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில், 15 கிலோ கஞ்சா இருப்ப து தெரிய வந்தது. விசாரணையில், பிடிபட்டவர்கள் மதுரையை சேர்ந்த முகமது கைப், 23, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நவாஸ், 22, மொய்தீன், 19, சிலம்பரசன், 24, என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement