தினமும் ரூ.10,000 ' கட்டிங் ' வசூலிக்கும் போலீஸ் அதிகாரி!

1

நா ளிதழை மடித்தபடியே, ''கோடிகளை குவிச்ச அதிகாரிகளை கண்டுக்கல வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி .

''எந்த துறையி லங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும் புதுார், ஒரகடம் பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுக்க, வருவாய் துறை சார்பில் பல இடங்கள்ல நில எடுப்பு அலுவலகங்கள் செயல்படுது... இந்த அலுவலகங்கள்ல, மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர், தாசில்தார், துணை தாசில்தார்னு நிறைய அதிகாரிகள் பணியில இருக்காவ வே...

''இதுல, கேட்பாரற்று கிடக்கும் நிலங்களை, அதாவது இழப்பீடு கேட்டு யாரும் வராத நிலங்களுக்கு, போலி ஆவணங்கள் தயார் செஞ்சு, ஆள் மாறாட்ட மும் பண்ணி இழப்பீடு வாங்கியிருக்காவ... கடந்த நாலு வருஷமா, இப்படி பல கோடி ரூபாயை அதிகாரிகள் சம்பாதிச்சிருக்காவ...

''இது பத்தி, வருவாய் துறை மேலிடம் வரைக்கும் புகார்கள் போயும், சட்டசபை தேர்தல் நேரத்துல இந்த விவகாரத்தை கிளற வேண்டாம்னு சத்தமில்லாம மூடி மறைச்சிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''வழக்கு பிடிச்சு குடுத்து, 'கட்டிங்' வாங்கு றாரு பா...'' என்ற அன்வர் பாயே தொடர்ந்தார்...

''சென்னை, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், கூடுவாஞ்சேரியில் செயல்படுது... இதன் கட்டுப்பாட்டுல ஒன்பது போலீஸ் ஸ்டேஷன்கள் வருது பா...

''இங்க நடக்கிற விபத்துகள் எல்லாம், கூடுவாஞ்சேரியில் தான் விசாரணைக்கு வரும்... இங்க இருக்கிற அதிகாரி, விபத்து வழக்குகளை எல்லாம், குறிப்பிட்ட ஒரு வக்கீலுக்கு மட்டுமே குடுக்கிறாரு பா...

''அந்த வக்கீலின் உதவியாளர்கள் ரெண்டு பேர், எப்பவும் ஸ்டேஷன்லயே இருக்காங்க... விபத்தில் காயம் பட்ட அல்லது உயிரிழந்தவங்களின் உறவினர்களிடம் விசாரிக்க மருத்துவமனைக்கு போலீஸ் அதிகாரி போறப்ப, இந்த உதவியாளர்களும் கூடவே போறாங்க பா...

''உறவினர்களிடம், 'விபத்து இழப்பீடு கேட்கிற வழக்கை இவங்களிடமே குடுங்க'ன்னு போலீஸ் அதிகாரி பரிந்துரை செய்றாரு... சோகத்துல இருக்கிற உறவினர்களும், அவங்க நீட்டுற பேப்பர்கள்ல கையெழுத்து போட்டு குடுத்துடுறாங்க பா...

''கடந்த ஒரு வருஷத்துல மட்டும் இந்த போலீஸ் அதிகாரி மூலமா, குறிப்பிட்ட வக்கீலுக்கு 100க்கும் மேற்பட்ட வழக்குகள் போயிருக்கு... இதுக்காக, வக்கீல் தரப்புல இருந்து, போலீஸ் அதிகாரிக்கு மாசா மாசம் கமிஷன் போயிடுது பா...'' என்றார், அன்வர்பாய்.

''கோவிந்த்மூர்த்தி காபி சாப்பிடறேளா...'' என நண்பரை உபசரித்த குப்பண்ணாவே, ''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்கு ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...

''திருச்சி மாவட்டம், துறையூர் போலீஸ் அதிகாரி ஒருத்தர், தினமும் சாயந்தரத்துக்கு மேல, நகரின் முக்கிய பகுதிகள்ல வாகன சோதனை நடத்தறார்... இதுல, மது குடிச்சிட்டு, பைக் ஓட்டிண்டு வர்ற நாலஞ்சு பேரை பிடிக்கறார் ஓய்...

''இவாளை ஸ்டேஷனுக்கு தள்ளிண்டு போய், அதுல ஒருத்தருக்கு மட்டும், 10,000 ரூபாய் அபராதம் போட்டு, எஸ்.பி., ஆபீ சுக்கு கணக்கு காட்டிடறார்... மத்தவாளிடம், 'கேஸ் போட்டா, 10,000 ரூபாய் கட்டணும்... இல் லாட்டி, 5,000 ரூபாயை வெட்டுங்க'ன்னு பேரம் பேசி, வசூல் பண்றார்... இப்படி தினமும் குறைஞ்சது, 10,000 ரூபாயாவது சம்பாதிக்கறார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''வடிவேல், இந்த பேப்பரை அங்கன வையும்...'' என, நண்பரை ஏவியபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement