வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் நியமனம்

கடலுார்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவராக, கடலுார் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிர்வாக இயக்குநர் துரைராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மே 5ம் தேதி நடக்கும் வணிகர் தின மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர், கடலுார் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிர்வாக இயக்குநர் துரைராஜை, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவராக நியமனம் செய்தார்.

அவருக்கு, பேரமைப்பு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது துரைராஜ், ''தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வளர்ச்சிக்காக பாடுபடுவேன்,'' என தெரிவித்தார்.

Advertisement