கஞ்சா பறிமுதல் இருவர் கைது

போத்தனூர்: குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ.வீரபாவானந்தம், போலீசாருடன் நேற்று முன்தினம் கோவைபுதூர், எம்.ஜி.ஆர்.நகர் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்தவர்களை நிறுத்தி விசாரித்தார்.

அவர்கள் கோவைபுதூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மூவேந்தர் பிரசாந்த், 20, நவீன்குமார், 24 என்பதும், விற்பனைக்காக, 500 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Advertisement