சுற்றுவட்டார செய்திகள்

வெயிலில் தவிக்கும் போலீசுக்கு ஜூஸ் திருப்பூர்:: கோடை வெயிலில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மோர்: போலீசாருக்கு ஜூஸ் வழங்கும் நிகழ்ச்சி, குமார் நகர் சிக்னலில் நடந்தது. போக்குவரத்து உதவி கமிஷனர் சேகர், போக்குவரத்து போலீசாருக்கு ஜூஸ் மற்றும் மோர் வழங்கினார்.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ. பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். கோடை காலம் முடியும் வரை, நான்கு மாதங்களுக்கு பழச்சாறு, மோர் போன்றவை போக்குவரத்து பணியில் உள்ள போலீசாருக்கு வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

மண்டிகளில் கிழங்கு வியாபாரம் மந்தம் மேட்டுப்பாளையம்:: மேட்டுப்பாளையம் மண்டிகளில் உருளைக்கிழங்கு வியாபாரம் மந்த நிலையில் உள்ளது. விலை வீழ்ச்சியடைந்து: ஊட்டி கிழங்கு சீசன் முடிந்துள்ளதால், வரத்து குறைந்துள்ளது. விலை வீழ்ச்சியடைந்து, வியாபாரம் மந்தமாக நடக்கிறது.

நீலகிரி மற்றும் வடமாநில உருளைக்கிழங்கு வர்த்தக சபை செயலாளர் பாபு கூறியதாவது:-

சில நாட்களுக்கு முன், 45 கிலோ எடை கொண்ட கோலார் கிழங்குகள் மூட்டை ஒன்று, ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது. தற்போது ரூ.600 முதல் ரூ.700 வரை தான் விற்பனையாகிறது.

குஜராத் கிழங்குகள் ரூ.850 முதல் ரூ.900 வரை விற்றன. தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், ஆக்ரா கிழங்குகள் ரூ.750 முதல் 900 வரையில் விற்பனையான நிலையில், ரூ.400 முதல் ரூ.500 வரைதான் விற்பனையாகின்றன. இதனால் வடமாநில மற்றும் கோலார் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். லாரி வாடகைக்கு கூட விலை கட்டுப்படி ஆகவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.-----

'லட்சியம் இல்லாத மனித வாழ்க்கை துடுப்பு இல்லாத படகை போன்றது' பெ.நா.பாளையம்:: ''மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் உள்ள ராமகிருஷ்ணர் கோயிலில் நடந்த கூட்டத்தில் சுவாமி கவுதமானந்தர் பேசியதாவது:

லட்சியம் இல்லாத மனித வாழ்க்கை, துடுப்பு இல்லாமல் செல்லும் படகை போன்றது. இந்த உலகில், உலகியல் இன்பம் மற்றும் ஆன்மிக இன்பம் என இரண்டு உள்ளது. இதில் பெரும்பாலான மனிதர்கள் உலகியல் இன்பங்களே பெரிது என நினைத்து வாழ்கிறார்கள்.

அவையெல்லாம் பூஜ்ஜியம். இந்த உலகத்தை விட்டு செல்லும்போது, அவற்றை எடுத்துச் செல்ல முடியாது. அவற்றுடன் இறைவன், ஆன்மிகம் என்ற பக்தி உணர்வையும், நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் வாழும் போதும், இந்த உலகத்தை விட்டு செல்லும்போதும், நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இறைவன் மீது நம்பிக்கை வைத்து வணங்கி வந்தால், வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், அதை தாண்டி செல்ல முடியும்.

தீய வழியில் செல்வம் சேர்த்த நபர்களின் மனதில் எப்பொழுதும் நிம்மதி இருக்காது. இறை வழியில் சென்று, நேர்மையான வழியில் பொருள்களை ஈட்டிய நபர் நிம்மதியாக இருப்பார்.

யாரைப் பார்க்கும் போது, இறைவனின் ஞாபகம் வருகிறதோ அந்த நபர் நல்ல நபர். அது போன்ற நபர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, சுவாமி கவுதமானந்தர் பேசினார்.

Advertisement